அமெரிக்காவின் பிரபல பாடகி, நடிகை, நடனக் கலைஞர் மற்றும் தொழிலதிபர் என பல திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஜெனிபர் லோபஸ், சமீபத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் தனது கலைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக, போலந்தின் தலைநகர் வார்சா நகரில் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், நிகழ்ச்சியின் வேளையில் எதிர்பாராத வகையில் மேடையில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. ஜெனிபர் லோபஸ் தனது பாட்டை பாடிக்கொண்டே மேடையில் நடந்து செல்லும் போது, இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி நிற மென்மையான ஆடை திடீரென அவிழ்ந்து, தரையில் விழுந்தது. இதனால் நிகழ்ச்சியை நேரில் பார்த்த பார்வையாளர்களும் விழா ஏற்பாட்டாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: பிறந்தநாளில் ரஜினியை பிரதிபலிக்க செய்த தனுஷ்..! மாலை அணிவித்து மகிழ்ந்த ரசிகர்கள் பேச்சு..!
இப்படி இருக்க, இந்நிகழ்வு நடக்கும்போது ஆடை கீழே விழுந்ததை லோபஸ் கையாண்ட விதம் தற்பொழுது அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. மனம் தளராமல், விரைவாக அந்த தருணத்தை சீர்செய்ய முயன்றார். அதற்குள் அந்த ஆடை தரையை தொட்டு விட்டது. இதை பார்த்த மேடையை சூழ்ந்திருந்த ரசிகர்கள் சிலர் அதிர்ச்சியடைந்த போதும், மற்றவர்களின் புன்னகையுடன் கூடிய கோஷங்கள் இசை மேடையை அதிரச் செய்தன.
இதற்கான முக்கியக் காரணம், ஜெனிபர் லோபசின் அறிவும், நேர்மறை அணுகுமுறையுமே. நிகழ்ச்சி தருணங்களை தவறாக எடுத்துக் கொள்ளாமல், அந்த சூழ்நிலையை தனது நகைச்சுவையுடன் சேர்த்து சமாளித்தார்.

ஆடை விழுந்த பின்னும், அவர் தனது கவர்ச்சிகரமான நடை, நிதானமான புன்னகை, அழகான போஸ்கள் மூலம் ரசிகர்களை வசியம் செய்தார். இதுவே அவரது மேடைத்திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பணியாற்றிய ஒருவர் கீழே விழுந்த அந்த ஆடையை எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும் லோபசின் இடுப்பில் கட்டிக் கொடுத்தார். அவரது இந்த உடனடி செயலும், தன்னுடைய பன்முகத்தன்மையுடன் கையாளும் லோபசின் நகைச்சுவையும் இணையத்தில் அதிக கவனத்தை பெற்றன. இந்த சம்பவத்திற்கு பிறகு, ஜெனிபர் லோபஸ் மேடையில் பேசும் பொழுது, "என்னை இந்த ஆடையை அணியும்படி கட்டாயப்படுத்தினர். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
👉🏻 Jennifer Lopez - வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம் 👈🏻
ஏனெனில், பொதுவாக நான் உள்ளாடைகளை அணிவதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பாக அந்த ஆடைதான் என்னை காப்பாற்றியது" என அவர் சிரித்தபடியே கூறினார். மேலும், "இந்த ஆடை எனக்கு தேவையில்லை. நீங்கள் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியவுடன், அந்த ஆடையை பார்வையாளர்கள் நோக்கி வீசி எறிந்தார். இதற்கு மத்தியில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அதன் பின்பு, மேலும் உற்சாகத்துடன் ஜெனிபர் லோபஸ் தனது பாடல்களை பாடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிகழ்வு, ஒரு மேடைக்கலைஞனின் நிதானமான மனப்பக்குவம், திறமை, மற்றும் ரசிகர்களுடன் உருவாக்கும் நேரடி தொடர்பு என்பவற்றின் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. சிறிய விபத்து நிகழ்ந்த போதிலும், அந்த நிமிடங்களை கூட ஒரு கலைச்செயலாக மாற்றி, நிகழ்ச்சியை வெற்றிகரமாக மாற்றிய ஜெனிபர் லோபசின் செயல்முறை, அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்துள்ளது. இன்று, இணையதளங்களில் இவரது இந்த நிகழ்ச்சி பற்றி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றன.

மக்கள் மட்டுமல்ல, விமர்சகர்களும் லோபசின் கவர்ச்சி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கலந்த கலை நிகழ்வுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆகவே, மேடையில் நடந்த திடீர் மாற்றங்களை, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், மனதை கொள்ளை கொள்ளும் தருணமாக மாற்றிய ஜெனிபர், உண்மையிலேயே கலையில் வல்லவர் தான்.
இதையும் படிங்க: மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!