இந்தி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற முகமாக விளங்கும் நடிகை மதல்சா சர்மா, சமீபத்தில் தனது காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2009 ஆம் ஆண்டு வெளியான "பிட்டிங் மாஸ்டர்" மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு, தமிழில் 2010ம் ஆண்டு வெளியான "தம்பிக்கு இந்த ஊரு", 2011ம் ஆண்டு வெளியான "காதலுக்கு மரணமில்லை"  மற்றும் 2013ம் ஆண்டு வெளியான "பத்தாயிரம் கோடி" போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்க சமீபத்திய நேர்காணலில், மதல்சா சர்மா தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதன்படி “சினிமாவில் தொடக்க காலத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகள் எதிர்கொண்டேன். அவற்றைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, காஸ்டிங் கவுசின் அழைப்புகள் மற்றும் அதற்கு இணங்கிய அழுத்தங்கள் அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியதாகவும், இறுதியில், அந்த பாதையில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.
அதுபோல அவர் குறிப்பிட்டபடி, இந்த அனுபவம் அவருக்கு பெரிய பாடமாக இருந்தது. நடிகையாக, தனது கலை மற்றும் திறமையை பாதுகாத்து முன்னேற வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் சிந்தித்து கடுமையான முடிவுகளை எடுத்திருப்பதாக கூறினார். இதை அவர் பகிர்ந்ததன் மூலம்,  நடிகைகள் மற்றும் திரைப்படத் துறையில் புதியதாக அடியெடுத்து வைப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிப்பதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அக்கறையை நினைவூட்டும் நோக்கமுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிச்சா இந்த இரண்டு ஹீரோவுடன் நடிக்கனும்.. அதுதான் என் ஆசை..! வெளிப்படையாக கூறிய நடிகை தன்யா பாலகிருஷ்ணா..!

மேலும் மதல்சா சர்மா இந்த உரையாடலில் மேலும் பேசுகையில், “எனது கலை மற்றும் திறமைக்கு மதிப்பு கொடுக்காமல், விரும்பாத சூழ்நிலைகளுக்கு சிக்காமல் என் பாதையைத் தொடர விரும்பினேன். அது மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும், அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியது” என்று தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வெளிப்படையான பேச்சு, சினிமாவில் காஸ்டிங் கவுசை எதிர்கொள்வது குறித்த உண்மையான அனுபவங்களை வெளிப்படுத்தியது.
மேலும், நடிகைகளுக்கான பாதுகாப்பு, உரிமை மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவை சமூகத்தில் முக்கியமானதாக இருப்பதாகவும், இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. எனவே மதல்சா சர்மாவின் இதுபோன்ற வெளிப்படையான உரையாடல்கள், தனிப்பட்ட அனுபவங்களை பகிர்வது மட்டுமல்லாமல், புதிய நடிகைகளுக்கு முன்னோக்கி செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. இது இந்திய சினிமா துறையில் கலைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொதுவான விவாதங்களையும் சமூகத்தில் எழுப்பியுள்ளது. இதன் மூலம், மதல்சா சர்மா காஸ்டிங் கவுசை எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்ததன் முக்கியத்துவம், புதிய தலைமுறையினருக்கு சினிமா வாழ்வில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் உதாரணமாக அமைந்துள்ளது.

இவர் பகிர்ந்துள்ள வார்த்தை, ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் சினிமா பணியாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செயலாக மாறி இருக்கிறது. பலரும், இது போன்ற மோசமான அனுபவங்களை நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கினாலே சினிமாவில் இது போன்ற காஸ்டிங் கவுசை தடுக்கலாம்.. புதிய தலைமுறைகளையும் காத்து திறமையானவர்களுக்கு முதலிடம் கொடுக்கலாம் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ‘சக்தித் திருமகன்' படம் திருட்டு கதையா.. நீங்க பாத்திங்களா..! ஆவேசப்பட்ட இயக்குநர் தனது பதிவால் பதிலடி..!