மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தைத் தொடங்கியவர் நடிகை மஞ்சிமா மோகன். தனது நடிப்புத் திறமையால் மலையாள திரையுலகில் சிறந்த இடத்தைப் பிடித்த இவர், பின்னர் கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் மின்னலாய் நுழைந்தார். இந்த திரைப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த மஞ்சிமா, தனது அழகான தோற்றம், எளிமையான நடிப்பு, மற்றும் கலக்கலான கவர்ச்சி இல்லாத கேரக்டர் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’, ‘FIR’ போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வந்தார். பின்பு 2019-ம் ஆண்டு, இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘தேவராட்டம்’ படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்துக்குப் பிறகு இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, கடந்த 2022-ம் ஆண்டு, இருவரும் காதலாகி திருமணமானது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திருமணத்திற்குப் பிறகு, திரைபடங்களில் குறைவாகவே தோன்றிய மஞ்சிமா, சில விளம்பரங்களில் மட்டும் பங்கேற்றுக் கொண்டார். இப்படி இருக்க சமீபத்தில் மஞ்சிமா மோகன், ஒரு முக்கியமான பேட்டியில், தனது உடல் எடை, மனநிலை, மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசினார். அந்த நேர்காணலில், மிகவும் நேர்மையாகவும், திறந்த மனதுடன் கூறியதிலேயே, சமூக வலைதளங்களில் இன்று அவர் பேசப்படும் முக்கியமான நபராகியிருக்கிறார்.

அந்த பேட்டியில் மஞ்சிமா பேசுகையில், "நான் என் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டேன். உணவைக் கட்டுப்படுத்தினேன், பயிற்சி செய்தேன், தியானம் செய்தேன். ஆனால், எனக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருந்ததால், அது எதிர்பார்த்த அளவுக்கு சரியாக முடியவில்லை. ஒரு கட்டத்தில், அறுவை சிகிச்சை செய்யலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், உடல் எடையால் ஏற்படும் பிரச்சனைகளை விட, அதை சமாளிக்க வேண்டிய மன அழுத்தமே மிகவும் கடினமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் தோன்றும் ஒவ்வொரு புகைப்படத்தையும் நாமே நம்முடன் ஒப்பிடத் தொடங்கி விடுகிறோம். 'நான் அவ்வளவு ஸ்லிம் இல்லை', 'அவளுக்கு மாதிரியே நான் இல்லையே' என்ற எண்ணங்களால் மனசு பதறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அந்த புகைப்படங்களும் சுமார் 90% ஏதோவொரு வடிவில் எடிட் செய்யப்பட்டவை தான். இப்படி இருக்க ஒரு நடிகையாக நான் பலவிதமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகின்றேன். ஆனால், என்னால் எல்லாவற்றையும் சரியாகவே செய்ய முடியாது. நான் ஒரு பெண், எனக்கும் பல உணர்வுகள் இருக்கின்றன, தோல்விகள், சந்தேகங்கள் எல்லாம் இருக்கின்றன" என மஞ்சிமா கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு பெண் நடிகையின் வாழ்க்கையும், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மன அழுத்தமும் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: காதலிக்காக கமல்ஹாசன் செய்த செயல்..! மறைத்து வைத்த உண்மையை போட்டுடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..!
மேலும் மஞ்சிமா கூறியது போல, ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள், ஒருவரின் உடல் எடையை நேரடியாக பாதிக்கும். இது ஒரு மருத்துவநிலை என்பதை நம் சமூகத்தில் பலரும் புரிந்துகொள்ளாமல், உடல் எடையை வைத்து ஒருவரின் அழகு, தகுதி, அல்லது மதிப்பு என தீர்மானிக்கின்றனர். மஞ்சிமாவின் இவ்வாறு திறந்த வெளிப்பாடு, இதுபோன்ற உடல் குறித்த பேச்சுக்கள் கிண்டல்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதை நினைவூட்டுகிறது. திருமணத்திற்குப் பிறகு, திரையில் மஞ்சிமா குறைவாகவே தோன்றியிருந்தாலும், தற்போது சில புதிய கதைகள் குறித்து பேச்சு நடந்து வருகிறதாம். சிறப்பான கதைக்களங்களை தேர்வு செய்து திரும்ப வரவேண்டும் என்ற ரசிகர்களின் வாழ்த்துகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஆகவே நடிகை மஞ்சிமா மோகன், தனது உடல்மேலும், மனத்மேலும் நடக்கும் பயணத்தை மிக நேர்மையாகவும், தெளிவாகவும் பகிர்ந்துள்ளார்.

இது இன்று பல இளம் பெண்களுக்கு, உண்மை அழகு என்னவென்பதை, மற்றும் சுய நம்பிக்கையை வளர்ப்பதை கற்றுத் தரும் ஒரு முக்கியமான செயலாக மாறியிருக்கிறது. இதே போன்ற திறந்த உரையாடல்கள் அதிகம் நிகழ வேண்டும் என்பதுதான் இன்று சமூகத்தின் அவசியம். மஞ்சிமா காட்டிய மனதளவிலான துணிச்சலும், நேர்மையும் அவரை இன்னும் உயரத்தில் கொண்டு செல்லும்.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' திரைப்படத்தில் கேமியோ யார் தெரியுமா..! திடீர் அப்டேட்டால் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!