60 வயதில் தனது மரணத்தை இறைவனிடம் வேண்டி மார்ச் 25ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் உயிரிழந்தார் பிரபல நடிகரும் கராத்தே மாஸ்டர் மற்றும் வில்வித்தை வீரனான ஷிகான் ஹுசைனி. இவர் மரணத்தின் தருவாயில் இருந்த பொழுது பேசிய வார்த்தைகள் அனைவரது உள்ளத்தையும் தைப்பதாக இருந்தது.

ஷிகான் ஹுசைனி மறைவுக்கு முன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "கேன்சர் என்பது ஒரு வரம். ஆனால் எனக்கு வந்து இருப்பது சாதாரண கேன்சர் அல்ல, 'ஏ பிளாஸ்டிக் அநேமியா' என்ற கேன்சர் எனக்கு உள்ளது. அதற்காக நான் பயப்படவில்லை வாழ்க்கையில் பயந்து கொண்டு இருப்பவன் தான் சாவுக்கு பயப்படுபவன், நான் 'கராத்தே மாஸ்டர்' எனக்கு வாழ்க்கையில் பயம் கிடையாது. ஆதலால் எனக்கு மரணத்தை கண்டு துளி கூட பயமில்லை.
இதையும் படிங்க: பட்டு புடவை... தலையில் கனகாமரப்பூ சும்மா தகதகன்னு மின்னிய கீர்த்தி சுரேஷ்!

அதுமட்டுமல்லாமல், நான் உயிர் வாழ வேண்டுமானால் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த பொழுது எனது நண்பர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றார்கள் அந்த நொடியில் திரும்பி வருவேனா இல்லையா என தெரியாது என்பதால் நான் ஆசையாக வளர்க்கும் கிளியையும் நாயையும் கொஞ்சி விட்டு தான் வந்தேன்.

ஆதலால் கண்டிப்பாக நான் மரணிக்க போகிறேன் என எனக்கு தெரியும். எனவே நான் தயாராக இருக்கிறேன். எனக்கு என்று குடும்பம் குட்டி என எதுவும் இல்லை தான். ஆனால் என்னை இன்று நல்லபடியாக பார்த்து கொள்கின்றனர் எனது மாணவர்கள். அதுமட்டுமல்லாமல் பிச்சையெடுத்து உயிர்வாழ எனக்கு விருப்பம் இல்லை ஆதலால் தான் நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை.
எனக்கு நீங்கள் நல்லது செய்ய நினைத்தால் எனது இடத்தை "பவன் கல்யானை" வாங்கிக்க சொல்லுங்கள் அவர் கண்டிப்பாக என்னுடைய வில்வித்தை வீரர்களை பார்த்து கொள்வார் என கூறி தனது பாரத்தை பவன் கல்யாண் மீது வைத்துவிட்டு உலகத்தைவிட்டு மறைந்து போனார் ஷிகான் ஹுசைனி.

அவரது மறைவுக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், ஷிஹான் ஹுசைனி உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியவந்தது. ஆதலால் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது, சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப தகுந்த ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன்.
அதற்காக அவரை அழைத்து செல்ல முடிவெடுத்து, அவரை காண 29ம் தேதி சென்னை வர முடிவு எடுத்தேன்; ஆனால் அதற்குள் அவரின் இறப்பு செய்தியை கேட்டது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரது ஆன்மா ஷாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என வேதனையோடு பேசி இருந்தார்.

இந்த நிலையில், தனது மறைவுக்கு பின் யாரையும் நம்பாத ஹுசைனி, தன்னிடம் பயிற்சி பெற்ற, தனக்கு பிரியமான ஒருவரின் பெயரில் அவரது வீட்டின் சொத்துரிமையை எழுதி வைத்திருக்கிறார். அதன்படி, தனது வீட்டை ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணுக்கு எழுதி வைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டை தனது நினைவிடமாக பவன் கல்யாண் மாற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அறிந்த அவரது மாணவர்கள், ஹுசைனி நம்பிய விஜய், அவரது இறுதி அஞ்சலிக்கு கூட வராமல் ஏமாற்றி விட்டார், இரண்டாவதாக நம்பிய பவன் கல்யாண் என்ன பண்ணுவாரோ என பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வேண்டா வெறுப்பில் ரேவதி..! குடோனில் மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!