இந்திய சினிமாவில் பிரமாண்டத்தை பெருமையாகக் கொண்டு வளர்ந்த இயக்குநர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் தான் எஸ்.எஸ். ராஜமௌலி. “ஈ”, “மகதீரா”, “பாகுபலி” மற்றும் “RRR” என ஒவ்வொரு படத்திலும் இவர் உருவாக்கியது எல்லாம் ஹிஸ்டரி தான். ஹாலிவுட்டையும் சில நேரங்களில் அதிக பட்ஜெட் கதைகளாலும், தொழில்நுட்ப தரத்தாலும் மிரட்டும் இயக்குநர் ராஜமௌலி, தற்போது தனது அடுத்த மாஸ் அட்வென்ச்சரான “SSMB29” திரைப்படத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் இளைய தளபதி, சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
இதுவே இவர் மற்றும் ராஜமௌலியின் முதல் கூட்டணியாகும். மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் இதற்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர். மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலி கூட்டணி என்றாலே அது சாதாரணம் கிடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இவர் “பாகுபலி”, “RRR” உள்ளிட்ட ராஜமௌலியின் முந்தைய வெற்றிப் படங்களுக்கு பிரம்மாண்டமான இசையை வழங்கியவர். ஆகவே, இந்தப் படம் இசை விரும்பிகளுக்கும் ஒரு தனி ட்ரீட் ஆகவே இருக்கும். இதுமட்டுமல்லாமல், ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிப்பதாகவும் தகவல்கள் உறுதியாகி வருகின்றன. ஹாலிவுட் வரை சென்று புகழ் பெற்று, மீண்டும் இந்திய சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா, இப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த, கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது மிக முக்கியமான அப்டேட் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனது எக்ஸ் தலைப்பக்கத்தில் “The First Reveal in November 2025 #GlobeTrotter” என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த டீசர் போல் இருந்த பதிவில் ராஜமௌலி மற்றும் அவருடைய குழுவினர் வெளிநாட்டில் இருப்பது போல் தோன்றும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. புகைப்படத்தில் வெளிநாட்டு பனிப்பாறை மலைப் பின்னணியில், “GlobeTrotter” எனும் ஹாஷ்டேக் மூலம் படம் முழுக்க உலகம் முழுவதும் ஷூட்டிங் நடைபெறக்கூடும் என்ற கெளரவமான குறிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு இந்திய சினிமாவின் pan-World Project ஆக உருவாகும் முன்னேற்றத்தை உறுதியாக காட்டுகிறது. இத்துடன், ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன: இப்படம் என்ன வகை திரைப்படம்? அதில் மகேஷ் பாபு எப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்? இது பாகுபலிக்கு அடுத்த பிரமாண்ட புராணக் கதைதானா அல்லது ஆக்ஷன் அட்வன்ச்சர் தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர் வீட்டு மொட்டை மாடியில் நடிகை சமந்தா..! கீர்த்தி சுரேஷ் கொடுத்த ரிப்லே வைரல்..!
இந்த நவம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கும் “First Reveal” பற்றி மிகுந்த எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும், ராஜமௌலி கடந்த பேட்டிகளில், " இந்தப் படம் உலகம் முழுக்க பயணிக்கும் ஒரு அதிரடியும், அறிவியலும் கலந்த கதை” எனத் தெரிவித்துள்ளார். இதனால், படம் ஒரு அட்வன்ச்சர் திரில்லர் ஆக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முன்பே இப்படம் குறித்துப் பேசும் போதெல்லாம், ராஜமௌலி “இது என்னுடைய கனவுப்படம்” என்றும், “மகேஷ் பாபுவின் இன்னும் பார்க்கப்படாத ஒரு பக்கம் இந்தப்படத்தில் வெளிவரும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் பட்ஜெட், தொழில்நுட்பம், கலை இயக்கம், ஷூட்டிங் ஸ்பாட்கள், போட்டோகிராபி என அனைத்தும் உலக தரத்தில் தயாரிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு "First Reveal in November 2025" என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வந்துள்ளதால், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இந்த படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: தனக்கு தொல்லை கொடுத்த நடிகர்.. ஒரே வார்த்தையில் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் - நடிகை தமன்னா ஓபன் டாக்..!