நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இன்று எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றாலும் ரஜினியை பிடிக்காத ரசிகர்கள் இருக்கவே முடியாது. இப்படி பல பேரும் புகழும் சம்பாதித்த ரஜினிக்கு கஷ்டமே வராது என நினைத்தால் அதுதான் தவறு. நடிகர் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைப்பதாக சொன்னவுடன் அவரது ரசிகர்கள் அவரை நினைத்து வேதனை பட ஆரம்பித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரஜினி எனக்கு எனது ரசிகர்கள் தான் முக்கியம் என கூறி அரசியலை விட்டு மீண்டும் நடிக்க வந்தார். அடுத்ததாக அவரது மகள் ஐஸ்வர்யாவை குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் வேதனை பட்டு வருகிறார்.
இப்படி இருப்பவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கிசுகிசுக்களில் சிக்கினார் எனறால் நம்ப முடிகிறதா. 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த். அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார்.

அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். இப்படி, தனது 74வது வயதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் போட்டியிட்டு, பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை தாண்டும் நடிப்பைத் தொடர்ந்து வழங்கும் ரஜினிகாந்த், தற்போதும் ரசிகர்களிடையே தனது புகழை பரப்பிக்கொண்டு வருகிறார். இவரது நடிப்பை மட்டுமல்ல, அவருடைய தனிமனித குணத்தையும் இத்தனை ஆண்டுகளாக மனதில் சுமந்துவரும் ஒரு நெருங்கிய நண்பர் ரஜினிக்கு இருக்கிறாராம்.
இதையும் படிங்க: அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!
அவர் தான் தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் பாபு. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், மோகன் பாபு ரஜினியுடனான தனது நட்பை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதன்படி, அவர் பேசுகையில், "மெட்ராஸில் பிளாட்பாரத்தில் இருந்தே போதே ரஜினியை எனக்கு தெரியும். ஒன்றும் இல்லாத போது தான் நாங்கள் சந்தித்தோம். ரஜினி அந்த காலத்தில் ஓர் அற்புதமான மனிதர். இன்று உலகமே அவரைப் பெருமைப்படுத்துகிறது. ஆனால் நாங்கள் சந்தித்த போது அவரிடம் புகழ் என்னும் ஆடம்பரமும், பணமும் எதுவும் கிடையாது. அதுவே எங்களின் நட்பு வேரூன்றி வளர காரணமாகியது. அவர் சூப்பர் ஸ்டார் ஆன பிறகும், எப்போது பார்த்தாலும் அவரை ‘Bloody Thalaiva’ன்னு தான் கூப்பிடுவேன். அந்த வகையில் நடிகர் என்பதை விட, அவர் ஒரு நல்ல மனிதர். பணம், புகழ், அரசியல் இப்படி எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. அவரது அடக்கம், நேர்மை, நேர்காணல்களில் அவர் காட்டும் எளிமை முதலானவை யாவும் அவர் எப்படி மனிதராக வாழ்கிறார் என்பதை நமக்கு காட்டும்" எனக் கூறினார்.

மோகன் பாபுவும் ரஜினியும் பல ஆண்டுகளாக திரையுலகில் தனித்த அடையாளத்துடன் இருப்பவர்கள். இருவரும் தங்கள் துறைகளில் தனி முத்திரை பதித்தவர்கள். ஆனால் நட்பின் பெயரில் அவர்கள் இடையே பெருமிதமோ, போட்டியோ இருக்காது என்பது இந்த பேட்டியில் வெளிப்பட்டது.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!