கன்னட திரையுலகில் தொடங்கிய தனது பயணத்தை தற்போது இந்திய சினிமா முழுவதும் கவனம் செலுத்தும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார் நடிகை ருக்மிணி வசந்த்.

குறிப்பாக ‘காந்தாரா: ஏ லெஜண்ட் – சாப்டர் 1’ திரைப்படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, அவரது நடிப்பு மற்றும் திரை ஆளுமை குறித்து தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவிலும் கவனம் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பே ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படங்களின் மூலம் நடிப்புத் திறனை நிரூபித்திருந்த ருக்மிணிக்கு, ‘காந்தாரா’ திரைப்படம் இன்னொரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படிங்க: ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பில் மீண்டும் வேகம்..!! 2-ம் கட்ட ஷூட்டிங் தொடக்கம்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!

இந்நிலையில், ருக்மிணி வசந்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் மூலம் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் மட்டுமின்றி, பெரிய அளவிலான பான்-இந்திய திரைப்படங்களிலும் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.

‘டாக்சிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படத்திலும் ருக்மிணி வசந்த் இடம்பெற்றுள்ளார். இந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், அதில் ருக்மிணி இணைந்திருப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘டிராகன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்..!! ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றி..!