பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்தது.

இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது. ஆனால் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்தியா தாக்காமல் பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் அவர்களது பயிற்சி இடங்களை மட்டும் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம். மேலும், இந்திய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. குறிப்பாக இந்த தாக்குதலில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரது வீடும் பயிற்சியகமும் நான்கு ட்ரோன்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மனசுக்குள் காதல் வந்துச்சா.. வந்தல்லோ.. வந்தல்லோ..! கிடைத்துவிட்டார் சமந்தாவின் புது காதலன்..!

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் தனது ட்ரோன்களை வைத்து இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி இருந்தது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.

ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல், மேலும் தீவிரமான நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. இந்நிலையில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் தலைமை இயக்குநர்கள் அனைவரும் இணைந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இப்படியான வேலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்டா ஸ்ட்ரோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛வீட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் வெகுதூரத்தில் நம் இந்திய ராணுவ படைவீரர்கள் நம் எல்லைகளை பாதுகாத்து நிற்கிறார்கள். சந்திக்காத மக்கள் மற்றும் பிறந்து வளர்ந்த நாட்டின் அன்பிற்காக தேசத்தின் பாரம் அனைத்தையும் தங்களது தோள்களில் சுமந்து நிற்கிறார்கள். அவர்களால் தான் இன்று அமைதி நிலவுகிறது, நம் பிள்ளைகள் அமைதியாக வீட்டில் உறங்குகிறார்கள், நமது கொடிகள் சுதந்திரமாக பறக்கின்றன.

வீரர்களின் இந்த தியாகம் தான் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கிறது. நாங்கள் வாழும் வாழ்க்கையை, இந்திய படை வீரர்களான நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து பாதுகாக்கிறீர்கள். நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம், நாங்கள் நன்றி கூறுவோம்; எப்போதும், இதுவே எங்கள் வாக்குறுதி. எங்கள் தாய்நாடு பாதுகாப்பாக இருக்கட்டும். எங்களை பாதுகாக்கும் வீரர்கள், அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் எப்போதும் பெருமையுடன், கண்ணியத்துடன் நடந்து செல்லுங்கள்'' எனக் நெகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி..! சோபிதா ரசிகர்கள் ராக்..! சமந்தா ரசிகர்கள் ஷாக்..!