தமிழ் டிவியில இப்போ எந்த சீரியல் தான் அடிக்கடி டிரெண்டிங்கில இருக்குனு கேட்டா எல்லாரும் விட நேரா “சிறகடிக்க ஆசை” தான் என சொல்றாங்க. காரணம் என்னனா இந்த சீரியலோட ரிஸன்ட் எபிசோட் தான். எல்லாமே அவ்வளவு emotional, அவ்வளவு twist, அவ்வளவு family drama எடுத்துருக்குது. இந்த வாரத்துல தான் ரோகிணி–மீனா டிராக் செம்ம லெவலுக்கு போயிடுச்சு.
ரோகிணி எப்போ அண்ணாமலை குடும்பத்துகிட்ட சிக்குறாங்கன்னு ரசிகர்கள் பல வாரங்களா expect பண்ணிகிட்டிருந்தாங்க. அது கடந்த வாரம் தான் பாட்டி வீட்டுல நடந்த திதி சீன்ல நடந்துரிச்சு. முத்துவின் பாட்டி வீட்டுக்கு எல்லாருமே சாமி கும்பிட போறாங்க. சாதாரண family trip மாதிரி ஆரம்பிச்ச இந்த சீன் தான் இந்த வாரத்தின் biggest twist. அங்க தான் ரோகிணி தன்னோட அப்பாவுக்கு திதி பண்ணுறப்போ மீனாவும் அங்க வந்து சிக்கிட்டாங்க. இருவரும் ஒரே நேரத்துல ஒருவரை ஒருவர் பாத்ததும் literally இருவரின் முகமும் freeze தான். ரோகிணி உடம்பே நடுங்குன மாதிரி அங்க நின்னாங்க. மீனா shock ஆகி breath கூட எடுக்க மாட்ட மாதிரி ஆகிட்டாங்க. ரோகிணி "இப்போயே வச்சி சிக்கிட்டோமே"ன்னு சொல்லாமலேயே முகத்துல ரொம்ப clear ஆ தெரிஞ்சுரிச்சு. மீனா உள்ளுக்குள் panic mode ல போயிட்டாங்க. இரண்டு பேருக்கும் கூட தெரியாம ஒருவரின் ரகசியம் இன்னொருவரின் கையில இருக்கு.
அதான் இந்த scene க்கு உண்மை weight. ரோகிணி past, அதனால உண்டான பயம், மீனாவுக்கு தெரிஞ்சது, ஆனா குடும்பத்திடம் சொல்லாமல் வைத்திருப்பது—இந்த emotional triangle தான் சீரியலை பாத்தவங்க முழுக்க goosebumps. இந்த திதி scene முடிஞ்சதும் எல்லாரும் சென்னைக்கு திரும்புறாங்க, ஆனா மீனாவின் மனம் மட்டும் ஒரே guilt ல கலைஞ்சிடுது. ரோகிணியை காப்பாத்தணும்னு நினைப்பாங்க, ஆனா குடும்பத்திடம் பொய் சொல்லறதால மனசு அமைதி இல்ல. ரோகிணி பக்கம் வேற பயம்—"மீனா எப்போ உண்மையைத் திறக்கப் போறாளோ?"ன்னு. இந்த mental pressure இருவரையும் இரண்டு திசைகளில தூங்க விடாம பண்ணுது. இதே மனநிலையில தான் இன்று வந்த எபிசோட் நம்மளை கண் கலங்க வச்சிடிச்சி. ரோகிணி முதல் முறையாக மீனாவிடம் தன்னோட முழு past-ஐ open ஆக சொல்றாங்க. "நான் 12ம் படிச்சப்போ என் அப்பா என்னை பணத்துக்காக ஒரு குடிகாரன் கிட்ட கொடுத்தருக்கார்"ன்னு ஆரம்பிச்சது கதை.
இதையும் படிங்க: வச்சான் பாரு ஆப்பு..! மீனாவின் வாழ்க்கை டோட்டலா குளோஸ்.. ரோகிணி வச்ச செக் அப்படி - 'சிறகடிக்க ஆசை' திக்திக் எபிசோட்..!

அவன் தினமும் குடிச்சு வந்து ரோகிணியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவான். இது கேட்டவங்க நெனச்சாலே கலங்கிடுவாங்க. ரோகிணி இதை சொல்லும்போது ஒரே உடம்பு நடுங்குற மாதிரி குரலில pain. அவன் குடிச்சு பேய் மாதிரி வந்து தூங்க விடாம பாலியல் தொல்லை கொடுப்பான். அதுனால தூக்காத நாள் இல்லை, புண்படுத்தாத நாள் இல்லை. ஒரு நாள் குடி அதிகமாதால அவன் ஆக்சிடன்ட்-ல செத்துட்டான். அதுக்கப்பறம் அவன் சொந்தகாரங்க, ரோகிணியை குழந்தையோட வீட்டுக்குள்ள வச்சுக்காம, பணம் கொடுத்து ரோட்ல நாயை விரட்டுற மாதிரி வெளியே துரத்தி விட்டுட்டாங்க. இந்த வரி கேட்டபோது மீனாவின் கண் சிவந்து நிற்குது. ரோகிணி அடுத்த வரி சொன்னதும் மீனாவும் பார்ப்பவர்களும் silent! ரோகிணி சொல்றாங்க—"பின்னாடி படிச்சேன், ஒரு நல்ல ஜாப் கிடைச்சது, வாழ்வை மீண்டும் கட்டிக்கணும்னு நினைச்சேன். அப்ப தான் ஒருத்தரை காதலிச்சேன். ஆனா எனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு கேள்விப்பட்டதும் அவனும் என்ன விட்டுட்டு போய்ட்டான்." இந்த வரி ரோகிணியை almost உடைஞ்சு நின்ன மாதிரி ஆக்குது.
மனோஜ் தான் அவளுக்கு கடைசி நம்பிக்கையும், கிடைக்காத அமைதியே. ரோகிணி சொல்றாங்க—"இப்போ மனோஜ் உடன் நல்லா இருக்கேன். ஆனா இந்த past தெரிந்ததும் விஜயா எங்களை வாழ விடமாட்டார்." அதுனால உண்மையா சொல்லாதிங்கட் என சொல்றாங்க ரோகிணி. ஆனாலும் கரையாத மீனா calm ஆ ரோகிணியை பார்த்து சொல்றாங்க—"எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு பொய் சொல்ல காரணம் இருக்கும்… ஆனா உண்மையை சொன்னா தான் நாம்ப தைரியமா வாழ முடியும்" என்றார். இதுக்கப்பறம் வந்த promo தான் fans ஐ நாள் முழுக்க கலக்கிட்டது. முத்து மீனா ஏன் சோகமா இருக்கறாள்? என்னதான் அவளோட மனசுல இருக்கு?ன்னு doubt ஆகிடிச்சு, "அது எல்லாம் பாட்டி ஊர்லதான் நடந்திருக்கணும்"ன்னு guess பண்ணுறார்.
இதுல biggest suspense என்னனா—முத்து கண்டுபிடிச்ச உண்மை என்ன? அது ரோகிணி past ஆ? அல்லது மீனா மறைத்த ரகசியமா? அல்லது குடும்பத்தில வேற twist ஆ? இந்த suspense தான் இன்று முழு சலசலப்பு. Fan pages எல்லாம் அதே கேள்வி தான். Characters ஒவ்வொருத்தருடைய நிலையும் இப்போ ஒரு வித்தியாசமான pressure ல இருக்கு. இந்த எபிசோட் தான் சீரியலை இப்போ வேற லெவல் hit ஆக்குது. நாளைய episode ல இதிலயே ஒரு பெரிய truth blast நடக்கப் போறது confirm. இந்த சீரியல் ஏன் மக்கள் மனசுல இவ்வளவு பிடிச்சிருக்குன்னா—ரசிகர்களுக்கே தெரியும். ஒவ்வொரு கதாபாத்திரமும் real. ஒவ்வொரு emotion உம் relatable. ரோகிணி அழுகையை பார்த்தா மக்கள் மனசே உருகிடுது. மீனா guilt-ஐ பார்த்தா குடும்பத்துல இருக்குற ஒருத்தியை நினைவு வருது.

முத்துவோட care பார்த்தா எல்லாருக்குள்ளும் ஒருவர் என தோணுது. விஜயாவை பார்த்தா வீட்டுக்குள்ள ஒருத்தி நினைவு வரும். அதான் இந்த சீரியல்—screen ல நடக்குது, ஆனா நிஜ வாழ்க்கையோட நிழல் மாதிரி. நாளைக்கு என்ன நடக்கும்? என்ன உண்மை வெளிவரும்? யார் சிதறப்போறாங்க? யார் strong ஆக நிற்பாங்க? யாருக்கு துன்பம்? என்பது நாளைக்கு தான் வெளிச்சம்.
இதையும் படிங்க: நடிகர் ஜாக்கி சான் வீட்டில் சொத்து பிரச்சனையா..! ஏழைகளுக்கு ரூ.3000 கோடி சொத்தை கொடுத்ததால் மகனின் விபரீத செயல்..!