தென்னிந்திய திரையுலகில் பாரம்பரியமும் ஆன்மீகமும் கலந்த படைப்புகளால் தனித்த பாதையை உருவாக்கி வரும் ரிஷப் ஷெட்டி, தற்போது தனது மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'காந்தாரா: சாப்டர் 1' மூலம் மீண்டும் ரசிகர்களை மந்திரமடையச் செய்ய உள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 2-ம் தேதியான நாளை உலகளாவிய ரீதியில் திரையிடப்படவுள்ளது. இப்படத்தில், கதாநாயகியாக ருக்மனி வசந்த் நடித்துள்ளார். இப்படியாக 'காந்தாரா' படத்தின் முதல் பாகம், 2022-ல் வெளியானபோது, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் கதை, பாவாடிப்பட்ட பாரம்பரிய கோணத்தில் ஆன்மீகத்தின் ஆழமான தாக்கங்களை சொல்லும் விதமாக அமைந்திருந்தது. அதன் பின் கதையாக உருவாகியுள்ள 'சாப்டர் 1' திரைப்படமும் அதே மாதிரியான சாஸ்திரச் சொல், கலை, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பாணியில் உருவாகியுள்ளது. அத்துடன் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்பட வெளியீட்டுக்கான முன்னோட்ட நிகழ்வுகளின் போது, ரிஷப் ஷெட்டி மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர், தனது அடுத்த படமாக 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஹனுமான்' படம், தெலுங்கு சினிமாவில் ஒரு புரட்சி அளித்த படம். தேஜா சஜ்ஜா நடித்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து, ஒரு பான் இந்திய வெற்றிப்படமாக பரவலான கவனத்தை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 'ஜெய் ஹனுமான்' உருவாகிறது என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுபற்றி ரிஷப் ஷெட்டி பேசுகையில், “'காந்தாரா: சாப்டர் 1' படம் வெளியாவதற்கு முன் எந்த வேறு படங்களிலும் ஒப்பந்தமாக வேண்டாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், பிரசாந்த் வர்மா கூறிய கதை எனை மனதளவில் பாதித்தது. அதனைத் தவிர்க்க முடியவில்லை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். ஏற்கனவே ஒரு போட்டோஷூட்டும் நடந்துவிட்டது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 'காந்தாரா: சாப்டர் 1' ரிலீஸுக்குப் பிறகு, 'ஜெய் ஹனுமான்' படப்பிடிப்பை தொடங்குவோம்.” என்றார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் நீண்ட நாள் கனவான ஆண்டனி வர்கீஸின் “கட்டாளன்”..! படத்தின் படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட்..!

இப்படி இருக்க மார்வெல் மற்றும் DC யூனிவர்ஸ் போன்று, இந்திய சினிமாவிலும் தனித்துவமான காமிக்ஸ் மற்றும் புராணத் தாக்கமுள்ள ஒரு சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கும் கனவுடன் இயக்குநர் பிரசாந்த் வர்மா துவங்கிய முயற்சியே பிரசாந்த் வர்மா சினிமேட்டிக் யூனிவர்சிட்டி. இந்த PVCU யில் தற்போது வரை, 'ஹனுமான்' – தேஜா சஜ்ஜா, 'அதிகா' – பெண் சூப்பர்ஹீரோ, 'ஜெய் ஹனுமான்' – ரிஷப் ஷெட்டி (வருகிற படம்)
இதில் 'ஜெய் ஹனுமான்' மிக முக்கிய பாகமாக விளங்குகிறது. PVCU யில், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புராணக் கதையுடன் பின்னப்பட்டிருக்கும். இந்த சினிமாடிக் யுனிவர்ஸ், இந்திய புராணங்களை நவீன திரைத்துறையில் புதுமையாக சொல்லும் ஒரு முயற்சி. இப்படியாக 'ஜெய் ஹனுமான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஜனவரி மாதம் துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான VFX, ஸ்கிரிப்ட் மேம்பாடு, லொகேஷன் ஹண்டிங் போன்ற பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையான ஆக்ஷன் என ஆன்மீக கலந்த பான்ட் கிளாஸ் திரைப்படமாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரசாந்த் வர்மா கூறுகையில், “ரிஷப் ஷெட்டி போன்ற ஒரு ஃபைவர் புல்லான நடிகரை இந்த யூனிவர்ஸில் இணைத்தது, PVCU க்கு மிகப் பெரிய வெற்றி. அவர் உடைய பாரம்பரியத்தின் மீது கொண்ட காதல், இந்த கதையில் மிகப் பெரிய உயிரூட்டும் அம்சமாக அமையும்” என்றார். ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தையும், வரவிருக்கும் 'ஜெய் ஹனுமான்' திட்டத்தையும் பின்பற்றி வரும் ஹோம்பாளே பிலிம்ஸ், தற்போது தென்னிந்திய சினிமாவின் மிகச் சக்திவாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது.
KGF, சலார் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, ஹோம்பாளே நிறுவனத்தின் படங்கள் பான் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தில், கதாநாயகியாக அறிமுகமாகும் ருக்மனி வசந்த், முன்னாள் கட்டிடக் கலைஞராக இருந்தவர். இவரது நடிப்புத் திறமை மற்றும் பாரம்பரிய தோற்றம் படத்தின் கதையோட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.

ஆகவே ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் நிலையில், அதற்குப் பிறகு உருவாகவுள்ள ‘ஜெய் ஹனுமான்’ படம், இந்திய சினிமாவின் அடுத்த அடையாளப்படுத்தும் முயற்சி எனலாம். ரிஷப் ஷெட்டியின் பாரம்பரியம் சார்ந்த பார்வையும், பிரசாந்த் வர்மாவின் புராண புனைவுகளும் இணையும் இந்த கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு ஆன்மீக – ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தால் தூக்கம் போச்சு... விஜய்க்காக நாம்தானே நிற்கனும்..! இயக்குநர் ஆர்.வி உதயகுமார் ஆவேசம்..!