இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சூரியின் முயற்சிக்கு ஒரு புறம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது. அப்படி என்ன தான் கதை என பார்த்தால், இன்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு ஒரு அழகான அக்கா இருக்கிறார் அவரது பெயர் கிரிஜா. இந்த கிரிஜாவிற்கும் ரவிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து உள்ளது. இப்படி இருக்க, ஒரு நாள் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் கிரிஜா, அங்கு அவரைப் பார்த்த அவருடைய மாமியார், உனக்கு இன்னும் குழந்தை பாக்கியமே இல்லை நீ எதற்கு இங்கு வந்தாய் என்று கூறி அவரை கரித்துக் கொட்ட, அவர் மீது திடீரென வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. வாந்தி எடுத்த மருமகளை கோபமாக பார்த்த மாமியார், அவள் மாசமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அந்த கோபம் தணிந்து அவரை அன்புடன் அரவணைக்கும் காட்சிகள் நன்றாகவே இருந்தது.

10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தனது அக்காவை நலமுடன் பார்த்துக் கொள்ளும் தம்பி இன்பா, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் 'என்னை பெற்றாரே' என சொல்லி அழுவார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தான் மருத்துவர் அவர் கவனிப்பில் தான் இன்பாவின் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது. அங்கு சூரி தனது அக்காவின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு இம்பிரஸ் ஆகும் ஐஸ்வர்யா, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை மாமனுடன் மட்டுமே இருந்த அக்காவின் மகன், நான் சூரி உடன் தான் இருப்பேன் என அடம் பிடிப்பதும் அவருடன்தான் தூங்குவேன் என அடம் பிடிப்பது எல்லாம் பெரிய பிரச்சனையாக மாறி சூரியினுடைய வாழ்க்கைக்கு பாதகமாக முடிகிறது.
இதையும் படிங்க: ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ரசிகர்களை மிரளவைக்கும் வித்தியாச தோற்றத்தில் நடிகர் நானி...!
இந்த சூழலில் சூரி எடுக்கும் முடிவுகளை வைத்தே கதைகள் நகர்ந்து செல்கிறது. இப்படி முழுக்க முழுக்க தாய்மாமன் பாசத்தை மட்டும் வைத்து உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி இருக்க தியேட்டரில் இப்படத்தை கண்டு கழித்த ரசிகர்கள் குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து இப்படத்தை காண ஆவலாக இருந்தனர். அதன்படி அப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என தவம் கிடந்தனர். இதன் பலனாக ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு தற்பொழுது பலன் கிடைத்துள்ளது. அதன்படி அனைவரது மனதையும் வென்ற மாமன் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான 'ஜீ5 நிறுவனம்' வாங்கி இன்று அப்படம் கோலாகலமாக வெளியாகி உள்ளது.

தொடர்ந்து விடுமுறை நாட்களில் படமானது வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். ஆக்ஷன் படங்களின் மீதுள்ள ஆர்வம் குறைந்து மீண்டும் குடும்ப படங்களை ரசிகர்கள் தேடி பார்ப்பது பல குடும்பங்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா லட்சுமியுடன் சூரி இணைந்து ஆட்டம்..! திருவிழாவை அமர்களப்படுத்திய மாமன் பட ஜோடி..!