ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை தனுஸ்ரீ தத்தா, மீண்டும் தனது வாழ்க்கையில் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசி ஒன்றை வெளியிட்டுள்ளார். "மீ.டூ" இயக்கத்தின் ஒரு முக்கியமான குரலாக 2018ல் நடிகர் நானா படேகர் மீது அவர் எழுப்பிய புகாருக்குப் பிறகு தான் தொடர்ந்து பல்வேறு மர்மமான தொல்லைகளை எதிர்கொண்டு வருவதாக நடிகை வேதனையுடன் கூறியுள்ளார்.

விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தின் மூலமாகவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். ஆனால் ஹிந்தி சினிமா உலகத்தில், குறிப்பாக "ஆஷிக் பனாயா ஆப் நே" படத்தின் மூலம் தனுஸ்ரீ தத்தா மிகவும் பிரபலமானவர். இப்படிப்பட்ட இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், கண்கலங்கிய குரலில், "இந்த தொல்லைகள் போதுமென்று எனக்கு மனம் விட்டுவிட்டது.. இது 2018 -ம் ஆண்டு #metoo-வில் நடந்த பிறகு தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது. இன்று வேதனையால் நொந்து நான் போலீசாரை அழைத்தேன்.. யாராவது தயவுசெய்து உதவுங்கள்..! தாமதமாகும் முன்னே ஏதேனும் செய்யுங்கள்" என கண்ணீர்மல்க தெரிவித்து இருக்கிறார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா பேசும் வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்..
அதன் பிறகு வெளியிட்ட மற்றொரு வீடியோ பதிவில், தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் அமைதியின்மையை குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், "2020 முதல், என் வீட்டின் மேலிருந்து மற்றும் கதவின் வெளியிலிருந்து வந்துகொண்டிருக்கும் சத்தங்கள் மற்றும் மிக மோசமான தட்டும் சத்தங்களை நான் அனுபவித்து வருகிறேன். கட்டிட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்து ஏமாற்றமடைந்து விட்டதால், சில ஆண்டுகளுக்கு முன்பே அதை விட்டுவிட்டேன். இப்போது அதையெல்லாம் சுமந்து கொண்டு, மனதைத் திருப்ப ஹிந்து மந்திரங்கள் உள்ள ஹெட்ஃபோன்களை போட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். இன்று என் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தொடரும் மன அழுத்தம் மற்றும் கவலையால் எனக்கு ‘குரோனிக் ஃபிடீக் சிண்ட்ரோம்’ வந்துவிட்டது என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இத்தனை சத்தங்கள் ஒரு நாள் முழுவதும், இரவிலும் தொடர்ந்தது. நேற்று நான் ஒரு பதிவு போட்டேன், இன்று இது நடக்கிறது! இப்போது எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள், நான் எதை அனுபவித்து வருகிறேன் என்பதை. இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, அவை எல்லாம் என் எப்ஐஆரில் சேர்க்கப்படும்" என தனுஸ்ரீ தத்தா பதிவிட்டுள்ள இந்தக் கண்ணீர் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலரும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
நடிகை தனுஸ்ரீ தத்தா இரண்டாவது ஆதார வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்..
சிலர், 2018-ல் அவர் மேற்கொண்ட "மீடூ" புகாருக்குப் பிறகு அவர் எதிர்கொண்ட சமூக மற்றும் தனிப்பட்ட சவால்கள் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 2018ம் ஆண்டு, 'ஹார்ன் ஓகி பிளீஸ்' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் ஹிந்தி திரையுலகில் பெரும் விவாதத்துக்குள்ளாக்கியது. அவர் எழுப்பிய புகாருக்கு ஆதரவாக சில பிரபலங்கள் ஆதரவும் கொடுத்து வந்தனர். ஆனால், இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ தத்தா திரையுலகில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார். ஆகவே, தனது #MeToo புகாருக்குப் பின்னர் ஏற்பட்ட விளைவுகளாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.

தனுஸ்ரீ தத்தா தற்போது தனது மன அழுத்தம், உடல் சோர்வு, மற்றும் உடல்நலக் குறைபாடுகளுடன் போராடி வருவதாகவும், தனது மனநிலையை சமநிலையில் வைத்திருக்க ஹிந்துமத மந்திரங்களை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். தனுஸ்ரீ தத்தாவின் பாதுகாப்பு குறித்து தற்போது மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்குமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் கண்கவரும் அழகில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!