தமிழ் திரையுலகின் பின்னணியில் வேலை செய்து பல வெற்றிப் படங்களில் தன்னை நிரூபித்தவராக விளங்கும் ஆடை வடிவமைப்பாளராகிய ஜாய்கிறிஸ்டில்டா மற்றும் சமீப காலங்களில் நடிகராக மாறிய பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இடையிலான தனிப்பட்ட உறவு தற்போது சமூகத்திலும், ஊடகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உறவு, திருமணம், குழந்தை வரவேற்பு, பின்னர் வந்த மனவேதனை, ஏமாற்றம், காவல் துறையில் புகார் உள்ளிட்டவையால் இது தற்போது சட்ட நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆடை வடிவமைப்பாளராக ஜில்லா, வேலைக்காரன், மெர்சல் போன்ற படங்களில் பணியாற்றிய ஜாய்கிறிஸ்டில்டா, திரையுலகுடன் நெருங்கிய தொடர்புடையவர். சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகள் வழியாக ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். சமையல் கலைஞராக தொடங்கிய பயணத்தில் பின்னர் திரைப்படங்களிலும் நடித்தார். இவர்களுக்கிடையே தொழில்முறை சந்திப்புகள் வழியாக பழக்கம் ஏற்பட்டு, அது விரைவில் தனிப்பட்ட உறவாக மாறியது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தும், அவர் ஜாய்கிறிஸ்டில்டாவுடன் இரண்டாவது திருமணம் செய்ததாகவும், தற்போது தன்னை கர்ப்பமாக்கியதாகவும், ஜாய்கிறிஸ்டில்டா கடந்த வாரம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறிய ஜாய்கிறிஸ்டில்டா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறையீடு செய்தார். அவர் அளித்த புகாரில், “மாதம்பட்டி ரங்கராஜ், என்னிடம் திருமண உறவின் பெயரால் நெருக்கமான உறவு வைத்தார். அதன்பிறகு என்னை கர்ப்பமாக்கினார். ஆனால் தற்போது அவர் என்னிடம் இருந்து முழுமையாக விலகிவிட்டார். திருமணம் செய்ததாகவும், குழந்தை பற்றிய பொறுப்பை ஏற்கவில்லை” என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை காவல் துறையினர் உடனடியாக விசாரணைத் தொடங்கினர். கடந்த வாரம் ஜாய்கிறிஸ்டில்டா, சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரிடம் பதிலளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: திடீரென ராமேஸ்வரம் கோவிலுக்கு விசிட் அடித்த நடிகர் பிரபு..! என்ன காரணமா இருக்கும்..!

புகாரின் தன்மை, மற்றும் உண்மை நிலைமையை உறுதி செய்ய போலீசார் விரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சர்ச்சையின் போது ஜாய்கிறிஸ்டில்டா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்த பதிவு ஒன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில், "ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... பெருமையாக தலையெழுப்பிக்கிட்டு நடக்கிறான். நீ உன்னை ஒரு உத்தமன் போலே காட்டிக் கொண்டு சுற்றிக்கிட்டே இருக்கிறாய். உன்னைப்போன்ற மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பார்த்திருக்க முடியாது. நீங்க ஓடினாலும் சரி, ஒளிந்தாலும் சரி, கருவில் இருக்கும் உன் குழந்தையின் சாபம் உன்னை நிழலாகவே தொடரும். ஒரு நாளும் உன்னை விட்டு போகாது" என்றார்.
இது சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு பல தரப்பில் உரையாடலுக்கும், விமர்சனத்திற்கும் வழிவகுத்துள்ளது. சிலர் ஜாய்கிறிஸ்டில்டாவின் துணிச்சலான வெளிப்பாட்டை பாராட்டியுள்ளனர், மற்றொருபுறம் சிலர் இந்த விவகாரம் தனிப்பட்டது என்பதால், இதனை அளவுக்கு மீறிய அரசியல் பேச வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ், இந்த விவகாரத்தில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அல்லது விளக்கத்தையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் மௌனமாகவே உள்ளார். சில ஊடகங்கள் அவரை தொடர்புகொள்ள முயன்றதாலும், பதிலளிக்கத் தயங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே நடந்ததின் உண்மை நிலை என்ன என்பது, காவல் துறையின் விசாரணை மற்றும் எதிர்வரும் சட்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தெளிவாகும். திரையுலகின் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் மனிதர்களே என்பதை மறக்க கூடாது. காதல், திருமணம், உறவுகள் அனைத்தும் உறுதியான பொறுப்புடன் மட்டுமே அணுகப்பட வேண்டும். தொழில்முறை வெற்றி, சமூக புகழ் ஆகியவை நிச்சயமாக அரியவைதான். ஆனால் அது மனிதாபிமானத்தின் மாற்றீடாக இருக்கக் கூடாது.
இதையும் படிங்க: விஜய்-ரஷ்மிகா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஓவர்.. அடுத்து டும்..டும்..டும்.. தான்..!! லீக்கான விஷயத்தால் குஷியில் ரசிகர்கள்..!!