• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒருவழியாக 2021-2023 -க்கான கலைமாமணி விருதுகளை அறிவித்த தமிழக அரசு..! லிஸ்ட்டே பெருசா இருக்கே..!

    தமிழக அரசு 2021 - 2023 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.
    Author By Bala Wed, 24 Sep 2025 10:47:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-the-tamil-nadu-government-announced-the-kalaimamani-awards-for-the-years-2021-2022-and-2023-tamilcinema

    தமிழ்நாடு அரசு கலைத்துறையில் பெரும் விழாக்காலத்தை வரவேற்கும் வகையில், 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான 'கலைமாமணி' விருதுகள் மற்றும் அகில இந்திய கலை விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. விருதுகள் விரைவில் நடைபெற உள்ள ஒரு பிரமாண்ட விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட உள்ளன. இந்த விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இப்படி இருக்க தமிழ்நாடு அரசு வழங்கும் 'கலைமாமணி' விருது, இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலைகள் போன்ற பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு வழங்கப்படும், மாநில அளவிலான முக்கிய விருதாகும். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் கோவிட் தாக்கம் மற்றும் நிர்வாக காரணங்களால் சீராக வழங்கப்படவில்லை. இப்போது மூன்று ஆண்டுகளுக்குமான விருதுகளை ஒரே கட்டமாக அறிவிப்பது என்பது தமிழ்நாடு அரசின் ஒரு பாராட்டுக்குரிய முடிவாகும்.

    விருதுகளை வழங்கும் முறை, மிகக் கடுமையான சோதனைகளை கடந்ததாய், உயர்நிலை வல்லுநர் குழுக்களின் பரிசீலனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், இயல், இசை, நாடகம், நாட்டியம், சினிமா, தொலைக்காட்சி, இசை நாடகம் மற்றும் கிராமியக் கலைகள் உள்ளிட்ட துறைகளாக பிரித்து, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி வல்லுநர் குழுக்களை அமைத்தது. இவ்வல்லுநர்கள், குறித்த துறைகளில் ஆழ்ந்த அனுபவம் மற்றும் திறமையுடையவர்கள் ஆவார்கள். அத்துடன், காலப்பொழுதுக்கு ஏற்ற புதிய கலைஞர்களையும், நீண்டகால சாதனையாளர்களையும் சேர்த்துப் பட்டியலிடப்பட்டதிலிருந்து, ஒரே நேரத்தில் புதுமையும் மரியாதையும் இணைந்தது இவ்விருதுகளின் தனிச்சிறப்பு.

    இதையும் படிங்க: தனது வருமானத்தை மறைத்த நடிகர் விஜய்..! ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமானவரி துறை..!

    kalaimamani award 2021 to 2023

    விருதுக்கு தேர்வாகிய மொத்த 292 கலைஞர்கள் (மூன்று ஆண்டுகளுக்குள்) கீழ்காணும் உரிமைகள் பெற்றுள்ளனர்: மூன்று சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம், விருதுப் பட்டயம், அரசால் ஏற்பாடு செய்யப்படும் அரசு விழாவில் நேரடியாக முதலமைச்சரிடம் இருந்து விருது பெறும் வாய்ப்பு என்பன. இது மட்டுமல்லாமல், கலைஞர்களுக்கு, அரசு அளிக்கும் அங்கீகாரமாக இது திகழ்வதால், எதிர்காலத்தில் கூடுதல் வாய்ப்புகளும், மதிப்பும் கிடைக்கும். அகில இந்திய அளவிலான மூன்று சிறப்பு விருதுகளும், ஒவ்வொரு வருடமும் மூன்று முக்கியமான கலைத் துறைகளில் தேசிய அளவிலான சாதனையாளர் ஒருவருக்குத் திரைபடமாக வழங்கப்படுகிறது.

    அந்த மூன்று விருதுகளும்: பாரதியார் விருது (இயல்), எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை), பாலசரசுவதி விருது (நாட்டியம்) ஆகும். இந்த விருதுகளுக்கு, இந்தியாவிலேயே பெரும் மரியாதை உண்டு. இவ்விருதுகளுக்கு தேர்வாகியவர் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க நபர்களே. இப்படியாக விருது பெற்றோருக்கு வழங்கப்படும் பரிசுகள் என பார்த்தால், அகில இந்திய விருது பெற்றோருக்கு - ரூ.1,00,000 மதிப்புள்ள பரிசுத் தொகை,  மூன்று சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம், அரசு அளிக்கும் விருதுப் பட்டயம் கிடைக்குமாம். இந்த விருதுகள், தேசிய அளவில் தமிழகத்தின் கலை மரபை எடுத்துச்செல்லும் வகையில் அமைந்துள்ளது. தனிநபர்களைத் தவிர, தமிழ்நாடு அரசு, கலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்: சிறந்த கலை நிறுவனம் – கேடயம், சிறந்த நாடகக்குழு – சுழற்கேடயம், எனும் இரண்டு வகையான பதக்கங்களையும் வழங்க உள்ளது.

    இது, கலைப்பணியில் இயங்கும் குழுக்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக விளங்கும். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் முழுப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. விருதுகள் வழங்கப்படும் நாள் மற்றும் விழா குறித்த தகவல்கள் விரைவில் அரசால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் கலாசார விழாக்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் கலை மரபு, பண்பாடு மற்றும் கலைஞர்களின் பங்களிப்பை உலகிற்கு எடுத்துச்செல்லும் ஒரு தூணாக இருக்கும்.

    kalaimamani award 2021 to 2023

    இது போல கலைஞர்களை மகிழ்விக்கத் தக்க விருதுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்பதே கலைவாதிகளின் ஒருமித்த கோரிக்கையாகவும் உள்ளது. விருது பெற்ற கலைஞர்களும், கலைமன்றங்களும், கலாச்சார ஆர்வலர்களும் அரசின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர். அவர்களுடைய பாராட்டுகளும், நன்றிகளும் சமூக ஊடகங்களில் பெரிதும் பரவியுள்ளது.

    விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது அதன்படி, 

    2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

    1. க. திருநாவுக்கரசு எழுத்தாளர்
    2. கவிஞர் நெல்லை ஜெயந்தா இயற்றமிழ்க் கவிஞர்
    3. எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் சமயச் சொற்பொழிவாளர்
    4. பாபநாசம் அசோக் ரமணி குரலிசை
    5. பா. சற்குருநாதன் ஓதுவார் திருமுறைதேவார இசை
    6. டி. ஏ. எஸ். தக்கேசி தமிழிசைப் பாடகர்
    7. திருச்சூர் சி. நரேந்திரன் மிருதங்கம்
    8. என். நரசிம்மன் கோட்டு வாத்தியம்
    9. கோ. பில்லப்பன் நாதசுர ஆசிரியர்
    10. திருக்காட்டுப்பள்ளி டி. ஜே. சுப்பிரமணியன் நாதசுரம்
    11. கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் நாதசுரம்
    12. திருவல்லிக்கேணி கே. சேகர் தவில்
    13. நாட்டியம் வழுவூர் எஸ். பழனியப்பன் பரதநாட்டிய ஆசிரியர்
    14. பிரியா கார்த்திகேயன் பரதநாட்டியம்
    15. நாடகம் பூச்சி எஸ். முருகன் நாடக நடிகர்
    16. காரைக்குடி நாராயணன் நாடக இயக்குநர்
    17. என். ஏ. அலெக்ஸ் ஆர்மோனியம்
    18. திரைப்படம் எஸ். ஜே. சூர்யா திரைப்பட நடிகர்
    19. சாய் பல்லவி திரைப்பட நடிகை
    20. லிங்குசாமி திரைப்பட இயக்குநர்
    21.ஜே.கே.(எ) எம். ஜெயகுமார் திரைப்பட அரங்க அமைப்பாளர்
    22. சூப்பர் சுப்பராயன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்
    23. சின்னத்திரை பி. கே. கமலேஷ் சின்னத்திரை நடிகர்
    24. இசை நாடகம் எம். பி. விசுவநாதன் இசை நாடக நடிகர்
    25. கிராமியக் கலைகள் வீர சங்கர் கிராமியப் பாடகர்
    26. நா. காமாட்சி பொய்க்கால் குதிரை ஆட்டம்
    27. எம். முனுசாமி பெரியமேளம்
    28. பி. மருங்கன் நையாண்டிமேள நாதஸ்வரம்
    29. கே. கே. சி. பாலு வள்ளி ஒயில்கும்மி
    30. இதர கலைப் பிரிவுகள் வே. ஜீவானந்தன் ஓவியர்

    2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

    1. இயல் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுத்தாளர்
    2. முனைவர் தி. மு. அப்துல்காதர் இலக்கியப் பேச்சாளர்
    3. சு. முத்துகணேசன் சமயச் சொற்பொழிவாளர்
    4. இசை ஜெயஸ்ரீ வைத்தியநாதன் குரலிசை
    5. சாரதா ராகவ் குரலிசை
    6. பகலா ராமதாஸ் வயலின்
    7. நெய்வேலி ஆர். நாராயணன் மிருதங்கம்
    8. செம்பனார்கோயில் எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ் நாதசுரம்
    9. சித்துக்காடு டி. ஜி. முருகவேல் நாதசுரம்
    10. திருக்கடையூர் டி. ஜி. பாபு தவில்
    11. சுசித்ரா பாலசுப்பிரமணியன் கதா காலட்சேபம்
    12. நாட்டியம் அமுதா தண்டபாணி பரதநாட்டிய ஆசிரியர்
    13. வி. சுப்பிரமணிய பாகவதர் பாகவத மேளா
    14. சுவாமிமலை கே. சுரேஷ் பரதநாட்டியக் குரலிசை
    15. நாடகம் பொன் சுந்தரேசன் நாடக நடிகர்
    16. கவிஞர் இரா. நன்மாறன் நாடக இயக்குநர்
    17. சோலை ராஜேந்திரன் நாடகத் தயாரிப்பாளர்
    18. திரைப்படம் விக்ரம் பிரபு திரைப்பட நடிகர்
    19. ஜெயா வி. சி. குகநாதன் திரைப்பட நடிகை
    20. விவேகா திரைப்பட பாடலாசிரியர்
    21. டைமண்ட் பாபு திரைப்பட செய்தித் தொடர்பாளர்
    22. டி. லட்சுமிகாந்தன் திரைப்பட புகைப்படக் கலைஞர்
    23. சின்னத்திரை மெட்டிஒலி காயத்ரி சின்னத்திரை நடிகை
    24. இசை நாடகம் என். சத்தியராஜ் இசை நாடக நடிகர்
    25. கிராமியக் கலைகள் ந. ரஞ்சிதவேல் பொம்மு தேவராட்டம்
    26. மு. கலைவாணன் பொம்மலாட்டம்
    27.எம். எஸ். சி. ராதாரவி தப்பாட்டம்
    28. கே. பாலு நையாண்டிமேள நாதஸ்வரம்
    29. இதர கலைப் பிரிவுகள் ஆர். சாமிநாதன் பண்பாட்டுக் கலை பரப்புனர்
    30. கே. லோகநாதன் ஓவியர்

    2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

    1. இயல் கவிஞர் கே.ஜீவபாரதி இயற்றமிழ்க் கவிஞர்
    2. இசை ஆர்.காசியப் மகேஷ் குரலிசை
    3. ஹேமலதாமணி வீணை
    4. வே. பிரபு கிளாரினெட்
    5. பி. பி. ரவிச்சந்திரன் நாதசுரம்
    6. ஞான நடராஜன் நாதசுரம்
    7. எம். எஸ். ஆர். பரமேஸ்வரன் நாதசுரம்
    8. ராமஜெயம் பாரதி தவில்
    9. பா. ராதாகிருஷ்ணன் தவில்
    10. நாட்டியம் க. தனசுந்தரி பரதநாட்டிய ஆசிரியர்
    11. வி. ஜெயப்பிரியா குச்சுப்பிடி நாட்டியம்
    12. கே. ஹரிபிரசாத் பரதநாட்டியக் குரலிசை
    13. நாடகம் திரு. என். ஜோதிகண்ணன் பழம்பெரும் நாடக நடிகர்
    14. வானதிகதிர் (எ) பெ. கதிர்வேல் நாடக நடிகர்
    15. வி. கே.தேவநாதன் விழிப்புணர்வு நாடக நடிகர்
    16. திரைப்படம் கே. மணிகண்டன் திரைப்பட நடிகர்
    17. எம். ஜார்ஜ் மரியான் திரைப்பட குணச்சித்திர நடிகர்
    18. அனிருத் திரைப்பட இசையமைப்பாளர்
    19. ஸ்வேதா மோகன் திரைப்பட பின்னணிப் பாடகி
    20. சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் திரைப்பட நடன இயக்குநர்
    21. நிகில் முருகன் திரைப்பட செய்தித் தொடர்பாளர்
    22. சின்னத்திரை என். பி. உமாசங்கர்பாபு சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்
    23. அழகன் தமிழ்மணி சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
    24. இசை நாடகம் ஏ. ஆர். ஏ. கண்ணன் இசை நாடக நடிகர்
    25. ஆர். எம். தமிழ்ச்செல்வி இசை நாடக நடிகை
    26. கிராமியக் கே. எம். ராமநாதன் தெருக்கூத்து
    27. டி. ஜெகநாதன் வில்லுப்பாட்டு
    28. கலைகள் சி. மகாமணி நையாண்டிமேள தவில்
    29. ஆ. சந்திரபுஷ்பம் கிராமியப் பாடல் ஆய்வாளர்
    30. இதர கலைப் பிரிவுகள் சு. தீனதயாளன் சிற்பி

    kalaimamani award 2021 to 2023

    முதலானவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள், தமிழகக் கலை உலகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்குகின்றன. மூன்று ஆண்டுகளின் கலைச்சான்றிதழ்கள் ஒரே மேடையில் வழங்கப்படவுள்ள விழா, தமிழக கலைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் கலாசார மரபுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமையும். 

    இதையும் படிங்க: குடிச்சா தியேட்டர்-ல Not Allowed...! 'காந்தாரா' படம் பார்க்க வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த படக்குழு..!

    மேலும் படிங்க
    முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!

    முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!

    அரசியல்
    விருது வழங்கும் விழாவில் மாஸ் காட்டிய மோகன்லால்..! தனது பேச்சால் கர்வத்தை உண்டாக்கிய அந்த காட்சிகள் வைரல்...!

    விருது வழங்கும் விழாவில் மாஸ் காட்டிய மோகன்லால்..! தனது பேச்சால் கர்வத்தை உண்டாக்கிய அந்த காட்சிகள் வைரல்...!

    சினிமா
    “NO WAY”... இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!

    “NO WAY”... இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய லாக்கப் டெத்… அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்…!

    தமிழகத்தையே உலுக்கிய லாக்கப் டெத்… அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்…!

    தமிழ்நாடு
    என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!

    என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!

    அரசியல்
    ஜார்க்கண்டில் என்கவுன்டர்! நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை! அதிரடி காட்டிய பாதுகாப்பு படை!

    ஜார்க்கண்டில் என்கவுன்டர்! நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை! அதிரடி காட்டிய பாதுகாப்பு படை!

    இந்தியா

    செய்திகள்

    முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!

    முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!

    அரசியல்
    “NO WAY”... இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!

    “NO WAY”... இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய லாக்கப் டெத்… அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்…!

    தமிழகத்தையே உலுக்கிய லாக்கப் டெத்… அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்…!

    தமிழ்நாடு
    என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!

    என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!

    அரசியல்
    ஜார்க்கண்டில் என்கவுன்டர்! நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை! அதிரடி காட்டிய பாதுகாப்பு படை!

    ஜார்க்கண்டில் என்கவுன்டர்! நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை! அதிரடி காட்டிய பாதுகாப்பு படை!

    இந்தியா
    பந்தக்கால் நட்டாச்சு..!! திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்..!!

    பந்தக்கால் நட்டாச்சு..!! திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்..!!

    பக்தி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share