தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சமையல் மற்றும் நகைச்சுவையை இணைக்கும் நிகழ்ச்சிகள் எப்போதும் பார்வையாளர்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளன. அந்த வரிசையில், பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு நேரடி போட்டியாக உருவாகி கடந்த ஆண்டுகளில் அதிக ரசிகர்களை கவர்ந்த “டாப் குக்கு டூப் குக்கு” நிகழ்ச்சி, தற்போது அதன் இரண்டாவது சீசனை தொடங்க தயாராகியுள்ளது. பிரபல சன் நெட்வொர்க், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து, இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: AFTER 36 YEARS... 'A' சான்றிதழுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் 'கூலி'..!
இதன்மூலம் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே ஒரு விதமான “சமையல் யுத்தம்” நிகழ்த்தப்பட இருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த 2024-ம் ஆண்டில் ஒளிபரப்பான “டாப் குக்கு டூப் குக்கு” சீசன் 1, சமையல் திறனுக்கும், காமெடியின் கட்டமைப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து பாராட்டைப் பெற்றது. அனால் "குக் வித் கோமாளி"-யை எதிர்த்து அதே மாதிரியான ஃபார்மெட்டை பின்பற்றியதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும் அந்த நிகழ்ச்சி ஒரு விதமாக புது அனுபவத்தை கொடுத்ததாக பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டது மறுக்க முடியாத உண்மை. இப்படி இருக்க புதிய ப்ரோமோவில், நிகழ்ச்சியின் தனித்துவமும், திரும்ப வந்துள்ள நடுவர்கள் மற்றும் புதிய ஹோஸ்டின் வருகையும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. "இங்கு நான்தான் கிங்! நான் சொல்வதுதான் சட்டம்" என்று ப்ரோமோவில் வெங்கடேஷ் பட் கூறும் வசனம், ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

வெங்கடேஷ் பட், பாரம்பரிய மற்றும் சமையலின் முன்னணி நிபுணராக விளங்குபவர். அவர் மட்டுமன்றி, மூன்றாவது நடுவராக சமையல் பிரபலங்கள் அல்லது தடபுடல் ஹோஸ்ட்கள் இணைவது சாத்தியமாக இருக்கிறது. அதன்படி பிரபல பாடகி மற்றும் நடிகையாக வலம் வரும் சிவாங்கி கிருஷ்ணகுமார் இந்த சீசனின் ஹோஸ்டாக இருப்பதாக ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பார்வையாளர்களிடம் ஏற்கனவே பிரபலம் என்பதால், நிகழ்ச்சியின் அடையாள முகமாக இருப்பார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். இந்த சீசன் 2-ல் பங்கேற்கவுள்ளவர்கள் பட்டியலில் பிரபலங்கள் மற்றும் டிக்டாக் மற்றும் யூடியூப் ஸ்டார்களும் இடம் பெற்றுள்ளனர்.
👉🏻 TOP COOKU DUPE COOKU 2 | COMING SOON | PROMO 👈🏻
ப்ரோமோவின் அடிப்படையில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை திலகமாக பாரப்படும் வடிவேலு, சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நகைச்சுவையாளரான GP முத்து, மோனிஷா, தீனா, தீபா, சைத்ரா, மற்றும் சோனியா அகர்வால் போன்றவர்கள் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் ஒவ்வொருவரும், சமையலில் குறைவாக தெரிந்தாலும், காமெடியில் தரமானவர்கள். இப்படி இருக்க ப்ரோமோவின்படி, நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதென கூறப்படுகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி அல்லது முதல் வார இறுதிகளில் ஒளிபரப்பாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒளிபரப்பாகும் நேரம் பற்றி இறுதி அறிவிப்பு இன்னும் வராத நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு நேரத்தில் அதிரடியாக ஒளிபரப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், விஜய் டிவியில் "குக் வித் கோமாளி" சீசன் 6 ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஷெஃப் டாமு, மதம்பட்டி ரங்கராஜ், கௌசிக் சங்கர் ஆகியோர் நடுவராக செயல்படுகின்றனர். பியூகாஸ், ராமர், மற்றும் பிரியா ராமன் போன்ற நகைச்சுவை பங்கேற்பாளர்கள் சேர்ந்து நிகழ்ச்சியை வெகுவாக வைரலாக்கி வருகின்றனர். இப்படி இருக்க சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் விமர்சனங்களும் கலந்த வண்ணமாக உள்ளன.

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சியில் புதிய சமையல் கலாசார போர் தொடங்கவுள்ளதை தெளிவாக காட்டுகிறது.ப்ரோமோவை தொடர்ந்து, பங்கேற்பாளர்களின் முழு பட்டியல், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு ஆசையா...ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!