தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காலமாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருபவர் தான் நடிகர் விஜய், இவர் தற்போது தனது நடிப்புப் பயணத்தை முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியுள்ளார். 'ஜனநாயகன்' என்ற பெயரில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படத்தின் கடைசி படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், தனது அரசியல் கட்சியான 'தமிழக வெற்றி கழகத்தை' முழுமையாக செயல்படுத்தி அதன் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இப்படி இருக்க, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில். விஜய்யின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனக்கென ஆதரவை உருவாக்கிக் கொள்ள பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய், தனது அரசியல் பயணத்திலும் மக்கள் தொடர்பிலும் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்க, விஜய்யின் அரசியல் பயணம் தற்பொழுது சூடுபிடித்து இருக்கும் இந்த வேளையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் அவரது குடும்ப வாழ்கையை பற்றி சில வதந்திகள் தற்பொழுது வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதாவுடன் இருந்து அவர் பிரிந்து இருப்பதாகவும், இருவரும் தற்போது வெவ்வேறு வீடுகளில் வசிக்கிறார்கள் எனவும் வதந்திகள் பரவுகின்றன. இந்தச் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியிருகின்றன.

இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், தமிழ் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினார். அதில் "விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தற்போது ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். அவர்களின் குடும்பம் நல்ல ஒருமைப்பாட்டுடன் இருக்கிறது. விஜய் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்துக்குள் கொண்டு வர விரும்பாதவர். அதனால் தான் அவர் தனது குடும்ப விவரங்களை வெளியிலே அதிகம் பகிர்வதில்லை. இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அதனை பற்றி பேசவேண்டாமே" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிக்கும் பொழுது தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா..! நடிகை ரம்பா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இப்படி, சினிமாவில் இருந்த போதிலிருந்தே நடிகர் விஜய் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு தான் வந்திருக்கிறார். தற்போது அரசியலிலும் அதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த கால அனுபவங்களைப் எல்லாம் வைத்து பார்த்தால், விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது பாதையில் தனது விதத்தில் பயணிப்பதே அவரது இயல்பான அணுகுமுறையாக உள்ளது. ஆகவே விஜய் தற்போது தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர் சொன்னதை போலவே 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு பின், 'மக்களின் தலைவர்' எனும் பொறுப்பை ஏற்று கொண்டு வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் உருவாகும் சில வதந்திகள், விமர்சனங்கள் முதலானவை அவரது பயணத்தில் பெரிய தடையாக இருக்காது என அவரது தொண்டர்கள் நம்புகின்றனர். அவரது நெருங்கிய நண்பர்களும் இதனை மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!