தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது பெரிய இயக்குநர்கள், பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் என அனைவராலும் விரும்பப்படும் ஒரு நாயகனாக திகழ்கிறார். அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகத்தினரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் தற்போது விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
அதன்படி, 'மதராஸி' திரைப்படம் பல காரணங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமானது, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார் என்பதே. ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘ஸ்பைடர்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இவர், பல ஆண்டுகளுக்கு பின் இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதில் சிலர் தமிழில் மிகவும் பழக்கப்பட்டவர்கள் அல்லாததால், இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாவது எதிர்பார்ப்பை அதிகமாக உருவாக்கி இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். இவரும் சிவகார்த்திகேயனும் முன்பு இணைந்த பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களது கூட்டணியில் வந்த எதிர்நீச்சல், ரெமோ, டாக்டர் போன்ற படங்களின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றிகளை கண்டுள்ளன. இப்போது ‘மதராஸி’யில் மீண்டும் இவர்களது கூட்டணி இணைவதால், இசை வெளியீட்டை சுற்றியுள்ள ஆர்வம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இப்படி இருக்க சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் இடைவெளி நேரத்தில் 'மதராஸி' திரைப்படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

அதில் சிவகார்த்திகேயன் நடித்த சில அதிரடி காட்சிகள், ஸ்டைலான நடிப்பு, எமோஷன்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. சிலர் சமூக ஊடகங்களில், இது சிவகார்த்திகேயனின் கெரியரில் மிக முக்கிய திருப்புமுனை என்று விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 'மதராஸி' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 24-ம் தேதி, சென்னையில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில், சரியாக மாலை 6 மணி முதல் படக்குழுவினர் மற்றும் பாலிவுட்-கோலிவுட் பிரபலங்கள் பங்குபெறும் வகையில் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமானதாக நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இது வீடா இல்ல மாளிகையா... சகல வசதிகளுடன் கூடிய லக்சூரி வில்லா - மிரள வைத்த நடிகை கிருத்தி சனோன்..!
இதில் படத்தின் பாடல்கள் முதன்முறையாக நேரடியாக வெளியிடப்படும். அனிருத் தன் இசைக்குழுவுடன் நேரடி இசை நிகழ்ச்சி அளிக்கவிருக்கிறார் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சாய் ராம் கல்லூரி என்பது மாணவர்கள், கலாசார விழாக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மிகச் சீக்கிரம் ட்ரெண்ட் ஆகும் இடமாக உள்ளது. அந்தக் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருப்பது பல இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் passes கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சில செய்திகளின்படி, இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே 'மதராஸி' என்பது சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் என்ற மிகப்பெரிய கூட்டணி, இந்த திரைப்படத்தை சிறந்த தரத்தில் உருவாக்கி இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆகவே வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, படத்தின் ப்ரொமோஷன் பிஸியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர்-5 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியானால், இது சிவகார்த்திகேயனின் கெரியர் டெர்னிங் பாயின்ட் ஆக மாறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகைகளை அவமானப்படுத்திய பாலிவுட் திரையுலகம் - நடிகை மதுபாலா ஆவேசம்..!