நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ம் தேதி அன்று பட்டப்பகலில் நடந்த ஆணவக்கொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயது ஐடி ஊழியர் கவின்குமார் (எ) செல்வகணேஷ், சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சாதி மறுப்பு காதல் தொடர்பாக நடந்த ஆணவக்கொலை என சொல்லப்படுகிறது.

கவின்குமார், மருத்துவராகப் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் உடன்பிறந்த சகோதரர் சுர்ஜித் (21), கவினை மருத்துவமனையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய தெருவுக்கு அழைத்து, மிளகாய்ப் பொடி தூவி, வெட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பு எல்லாம் கரெக்ட்டா தான் பண்ணோம்.. ஆனா இத நாங்க எதிர்பார்க்கல.. மனமுடைந்த பா.ரஞ்சித்..!
கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்தக் கொலைக்கு நீதி கோரி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் சாதி வன்முறை மற்றும் ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்நிலையில் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தள பதிவில், "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்... சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்" என்று தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு எல்லாம் கரெக்ட்டா தான் பண்ணோம்.. ஆனா இத நாங்க எதிர்பார்க்கல.. மனமுடைந்த பா.ரஞ்சித்..!