• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குழந்தையாலே இது சாத்தியம்.. அன்புதான் வெல்லும்..!! மாதம்பட்டி ரங்கராஜுடன் மீண்டும் இணைந்தது குறித்து ஜாய் கிரிஸில்டா உருக்கம்..!

    மாதம்பட்டி ரங்கராஜுடன் மீண்டும் இணைந்ததை குறித்து ஜாய் கிரிஸில்டா உருக்கமாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Tue, 08 Sep 2026 12:41:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    joy-crizildaa-opens-up-about-reuniting-with-madhampatti-rangaraj-love-has-won

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களில் ஒன்றாக மாறியிருந்தது பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தொகுப்பாளர் ஜாய் கிரிஸில்டா தொடர்பான சர்ச்சை. திருமணம், குழந்தை, பிரிவு, சட்டப் போராட்டம், டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த விவகாரம் தற்போது சுமூகமான பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

    ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிந்து நிற்கும் சூழல் உருவான நிலையில், தற்போது இருவரும் தங்களது மகன் ராகாவுடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, “நாங்கள் மீண்டும் சேர்ந்ததற்கு குழந்தைதான் காரணம். அன்புதான் வெல்லும் என்பது என் விஷயத்தில் உறுதியாகிவிட்டது” என்று ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டி, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

    கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியானாலும், தற்போது ஜாய் கிரிஸில்டா தனது குடும்ப வாழ்க்கை தொடர்பாக வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர். அந்த திருமணத்தின் மூலம் அவருக்கு ஒரு மகனும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜும் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார்.

    இதையும் படிங்க: என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    இந்தச் சூழலில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் பொதுவெளிக்கு வராமல் இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் ஜாய் கிரிஸில்டா கர்ப்பமானதும், அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் இந்த உறவு தொடர்பான விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்தக் குழந்தைக்கு ராகா என பெயர் சூட்டப்பட்டது.

    joy-crizildaa and madhampatti-rangaraj

    ஆனால், குழந்தை பிறந்த பிறகு நிலைமை எதிர்பாராத விதமாக மாறியதாக கூறப்படுகிறது. ஜாய் கிரிஸில்டாவுக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் அவரிடமிருந்து விலகத் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலை ஜாய் கிரிஸில்டாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது திருமண உறவு மற்றும் குழந்தை தொடர்பான விஷயங்களை அவர் பொதுவெளியில் வெளிப்படையாக பேசத் தொடங்கினார். இதன் காரணமாக விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இருவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாதங்கள் அதிகரித்தன.

    ஒருபுறம் தங்களது திருமண உறவை ஜாய் கிரிஸில்டா வெளிப்படுத்திய நிலையில், மறுபுறம் குழந்தையின் தந்தை யார் என்பது தொடர்பாகவும் சர்ச்சை உருவானது. இந்த விவகாரம் இறுதியில் சட்ட ரீதியான போராட்டமாக மாறியது. இந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக அமைந்தது டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான விவகாரம். குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் டிஎன்ஏ பரிசோதனை கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் மகன்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இதன் பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. குழந்தை ராகாவை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதுடன், தனது மகனின் நலன் மற்றும் எதிர்காலத்துக்காக பொறுப்பேற்கும் நிலைக்கு வந்ததாக கூறப்பட்டது. பல மாதங்களாக நீடித்த இந்த விவகாரத்தில் இதுவொரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டியில், தாங்கள் மீண்டும் இணைந்ததற்கான முக்கிய காரணம் தங்களது குழந்தைதான் என்று தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “நாங்கள் மீண்டும் சேர்ந்ததற்கு குழந்தைதான் காரணம். அதற்கான ஒரு நீதி வாங்கிக்கொடுத்தாச்சு” என்று கூறியுள்ளார்.

    மேலும், ஒரு தாயாக குழந்தையை அவரது தந்தையிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு அம்மாவாக குழந்தையை அப்பாவிடமிருந்து பிரிக்க முடியாது. யாருக்குமே அந்த உரிமை கிடையாது” என்று கூறியுள்ள ஜாய், தனது மகனின் வாழ்க்கையில் தந்தையின் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பேட்டியின் மூலம், தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை விட குழந்தையின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. ஜாய் கிரிஸில்டாவின் பேட்டியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மற்றொரு வார்த்தை “அன்புதான் வெல்லும்” என்பதுதான். “அன்புதான் வெல்லும் என்பது என் விஷயத்தில் உறுதியாகிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    joy-crizildaa and madhampatti-rangaraj

    பல மாதங்களாக தொடர்ந்த பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தங்களது வாழ்க்கை மீண்டும் சுமூகமான பாதைக்கு திரும்பியிருப்பதை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர் இருவரும் இணைந்து செயல்படுவது அவசியம் என்ற கருத்தையும் அவரது பேச்சு பிரதிபலிக்கிறது. இதற்கிடையே, இருவரும் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மற்றொரு அடையாளமாக ராகாவுக்கு நடைபெற்ற மொட்டை அடிக்கும் நிகழ்வும் அமைந்துள்ளது.

    ராகாவின் மொட்டை நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜும் கலந்து கொண்டுள்ளார். கடந்த காலத்தில் இருவரது உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், தற்போது குழந்தையின் முக்கியமான நிகழ்வில் இருவரும் ஒன்றாக இருந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், தந்தையாக ராகாவின் வாழ்க்கையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ் என்ற பார்வையும் உருவாகியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையும் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    அந்த அறிக்கையில், “எனது மகன் ராகவுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்துவருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை, குழந்தையின் வாழ்க்கையில் தந்தையாக தனது பங்களிப்பை தொடர்ந்து செய்யப்போவதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்த முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டது.

    குறிப்பாக கடந்த காலங்களில் நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில், குழந்தையின் நலனை முன்னிலைப்படுத்தி அவர் வெளியிட்ட இந்த அறிக்கை அப்போது பரவலாக பேசப்பட்டது. ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான விவகாரம் பல மாதங்களாக நீடித்த நிலையில், தற்போது இருவரும் குழந்தையுடன் இணைந்து இருப்பது அவர்களது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதைப் போல பார்க்கப்படுகிறது. குடும்ப உறவு தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானாலும், தற்போது இருவரும் தங்களது மகன் ராகாவின் நலனில் கவனம் செலுத்தி வருவது முக்கியமான மாற்றமாக உள்ளது.

    joy-crizildaa and madhampatti-rangaraj

    குறிப்பாக, ஜாய் கிரிஸில்டா “குழந்தைதான் காரணம்” என்று கூறியிருப்பதும், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே தெரிவித்திருப்பதும் இந்த மாற்றத்தை தெளிவாக காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பொதுவெளிக்கு வந்துவிட்டால், அதனை மீண்டும் சுமூகமாக்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும். குறிப்பாக பிரச்சினை சட்டரீதியாக சென்றுவிட்ட நிலையில், மீண்டும் உறவில் மாற்றம் ஏற்படுவது எளிதான ஒன்றல்ல. ஆனால், ஜாய் கிரிஸில்டாவின் சமீபத்திய பேட்டி மற்றும் ராகாவின் நிகழ்வில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டது போன்ற சம்பவங்கள், இருவரும் கடந்த காலத்தை கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், “அன்புதான் வெல்லும்” என்ற ஜாய் கிரிஸில்டாவின் வார்த்தைகளும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. தற்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வந்து, மகன் ராகாவை மையமாக வைத்து புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மகனின் எதிர்காலம் மற்றும் மகிழ்ச்சிக்காக இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வாழ்த்துகளும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. பல திருப்பங்களையும் போராட்டங்களையும் சந்தித்த இந்த குடும்பத்தின் வாழ்க்கை இனி எந்தவித சர்ச்சைகளுமின்றி, ராகாவின் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தையும் மையமாக வைத்து அமைதியாக நகர வேண்டும் என்பதே அவர்களை வாழ்த்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: நயன்தாரா ஏன் வரவில்லை.. மேடையிலேயே வச்சி சம்பவம் செய்த ராதிகா..!! ‘ஹாய்’ வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING மாணவிக்கு கிடைத்த நீதி... 16 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை...!

    #BREAKING மாணவிக்கு கிடைத்த நீதி... 16 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை...!

    தமிழ்நாடு
    ஒரு தந்தையாக பெருமைப்பட்ட நேரம்..!! சட்டசபையில் அதிரடி பேச்சு… மகனை நேரில் பார்த்து நெகிழ்ந்த எஸ்.ஏ. சந்திரசேகர்..!!

    ஒரு தந்தையாக பெருமைப்பட்ட நேரம்..!! சட்டசபையில் அதிரடி பேச்சு… மகனை நேரில் பார்த்து நெகிழ்ந்த எஸ்.ஏ. சந்திரசேகர்..!!

    சினிமா
    "ஊர் ஊராய் விசில் ஊதிய விஜய்..." - ஒரே பாயிண்டில் தவெகவை தவிடு பொடியாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    "ஊர் ஊராய் விசில் ஊதிய விஜய்..." - ஒரே பாயிண்டில் தவெகவை தவிடு பொடியாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பெங்களூரு டு சென்னை பறந்து வந்த ஸ்பெஷல் டெலிவரி... 507 கிலோ ஆபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போலீஸ்...!

    பெங்களூரு டு சென்னை பறந்து வந்த ஸ்பெஷல் டெலிவரி... 507 கிலோ ஆபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போலீஸ்...!

    தமிழ்நாடு
    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    சினிமா

    செய்திகள்

    இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING மாணவிக்கு கிடைத்த நீதி... 16 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை...!

    #BREAKING மாணவிக்கு கிடைத்த நீதி... 16 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை...!

    தமிழ்நாடு

    "ஊர் ஊராய் விசில் ஊதிய விஜய்..." - ஒரே பாயிண்டில் தவெகவை தவிடு பொடியாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பெங்களூரு டு சென்னை பறந்து வந்த ஸ்பெஷல் டெலிவரி... 507 கிலோ ஆபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போலீஸ்...!

    பெங்களூரு டு சென்னை பறந்து வந்த ஸ்பெஷல் டெலிவரி... 507 கிலோ ஆபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போலீஸ்...!

    தமிழ்நாடு
    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share