உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே என்ற இளம்பெண் தனது காந்தக் கண்களால் பெரும் பிரபலமடைந்தார். ருத்ராட்ச மாலைகள் விற்று வந்த இவர், ஒரு யூடியூபரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானார்.

"கும்பமேளா மோனாலிசா" மற்றும் brown beauty என்று அழைக்கப்பட்ட இவரது அழகு, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநில தொலைக்காட்சிகளும் இவரை பிரபலப்படுத்தின. ஆனால், இந்த புகழ் அவருக்கு தொந்தரவையும் ஏற்படுத்தியது. செல்ஃபி எடுக்க விரும்பியவர்களின் கூட்டம் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால், மோனாலிசாவும் அவரது குடும்பமும் வருத்தமடைந்தனர். இதனால், அவர் கும்பமேளாவை விட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இதையும் படிங்க: செம ஹாட் ஆக விருது விழாவுக்கு வந்த நடிகை மீனாட்சி சவுத்ரி..!
இருப்பினும், சமூக வலைதளங்களில் இவரது புகழ் தொடர்ந்து வளர்ந்தது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. பின்னர், மோனலிசா மேக்கப் செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோக்கள் மீண்டும் வைரலாகின. அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.
மோனலிசாவின் புகழ் பாலிவுட்டில் கால் பதிக்க வழிவகுத்தது. “டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயணத்தில் சவால்களும் இருந்தன. மோனலிசா டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அவரை உலுக்கியது. இதைத்தொடர்ந்து கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மலையாளம் பேசி பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும் மத்திய பிரதேசத்திற்கு சென்ற "கண்ணழகி" மோனாலிசாவை காண ஏராளமான மக்கள் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரமான இந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மோனாலிசா கலந்துகொண்டபோது, அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மோனோலிசா போஸ்லேவுக்கு மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘நாகம்மா’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில், நடிகர் கைலாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குநர் பினு வர்கீஸ் இயக்கும் இப்படத்தை ஜீலி ஜார்ஜ் தயாரிக்கிறார். இதன் பூஜை விழா சமீபத்தில் கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது, இதில் மோனலிசாவின் பங்கேற்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மோனலிசாவின் இந்த வாய்ப்பு, அவரது குடும்பத்தின் வறுமையைப் போக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவில் தொடங்கிய அவரது பயணம், சமூக வலைதளங்களின் ஆற்றலால் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மோனலிசா, “மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன்” எனத் தெரிவித்திருந்தார். இவரது எளிமையும், அழகும், உறுதியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மோனலிசாவின் இந்தப் புதிய பயணம், மலையாள சினிமாவில் ஒரு புது நட்சத்திரத்தை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!!
இதையும் படிங்க: சேலையில் வீடு கட்டி பெயரை வைத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!