மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், 2011ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான சீடன் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இது மலையாளப் படமான நந்தனம் படத்தின் தமிழ் மறு ஆக்கமாகும்.

2012இல் வெளியான மல்லு சிங் என்ற மலையாளப் திரைப்படம் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. இப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தமிழ் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். தெலுங்கில் ஜனதா கேரேஜ் (2016), பாகமதி (2018), மற்றும் யசோதா (2022) ஆகிய படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
இதையும் படிங்க: நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்திற்கு கிடைக்குமா ஜாமீன்...? - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...!

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் உன்னி முகுந்தன். 2021இல் மேப்பாடியன் Roshi (2022), மாலிகாபுரம் (2022), மற்றும் மார்கோ (2024) ஆகிய படங்களில் நடித்ததுடன், மேப்பாடியன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி முதல் தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும் அச்சாயன்ஸ் (2017) படத்தில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றியுள்ளார். 2011இல் பாம்பே மார்ச் 12 படத்திற்காக சைமா விருது (சிறந்த புதுமுக நடிகர்) வென்றார். சமீபத்தில் 2024ல் வெளியான மார்கோ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, நடிகர் உன்னி முகுந்தன் அவரது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாகதான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய ஸ்மிருதி இரானி… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!