தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், கமர்ஷியல் மற்றும் வரலாற்று சிறப்புடைய கதைகளில் தன்னை சாதனையாளராக நிலைநாட்டியவர் தான் நடிகர் கார்த்தி. தனது தனித்துவமான கதைகளையும், நடிப்பு யுக்தியையும் வைத்து இவர் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் கதைகளும் வித்தியாசமாகவே இருக்கும். 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நிலையில், சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' படத்தையும் யாராலும் மறக்க முடியாது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் கார்த்தியின் நடிப்பிற்காகவே பல பாராட்டுக்கள் குவிந்தது. இப்படி இருக்க, தற்போது அவரது நடிப்பில் உருவாகவிருக்கும் 29-வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரச்சனையா.. எங்களுக்கா.. நெவர்..!! தனது ஸ்டைலில் 'நச்' பதில் கொடுத்த நயன்தாரா..!

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திற்கு, ‘மார்ஷல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'டாணாக்காரன்' படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நம்பிக்கை இயக்குநராக வலம் வரும் இயக்குனர் தமிழ், தற்போது கார்த்தியுடன் கைகோர்க்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 'மார்ஷல்' திரைப்படம், கடல் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் யாரும் பார்த்திராத வகையில் வெவ்வேறு பாணியில் நகரும் அதிரடி படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடி கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக நடிகர் நானி-யும் காணப்பட இருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பெருமை வாய்ந்த நடிகரான நானி, இத்தகைய கேமியோ தோற்றத்தில் இணைவது, மக்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.
நடிகர் கார்த்தியின் 29-வது படமான 'மார்ஷல்' படத்தின் டைட்டல் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை பாவனி ரெட்டி..! ஹாட் போட்டோஷூட் இணையத்தில் ட்ரென்டிங்..!