• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    காற்றில் கலந்தார் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ்..!! திரையுலகினர் இரங்கல்..!!

    பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக தனது 70 வயதில் காலமானார்.
    Author By Shanthi M. Tue, 03 Feb 2026 15:24:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    music-director-sp-venkatesh-passed-away

    தென்னிந்திய சினிமாவின் மறக்க முடியாத இசைப் படைப்பாளர்களில் ஒருவரான எஸ்.பி. வெங்கடேஷ் இன்று (பிப்ரவரி 3, 2026) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

    1955 மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த வெங்கடேஷ், இசைக்கு ஆர்வம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை பழனி ஒரு சிறந்த மாண்டலின் கலைஞர். மூன்று வயதிலிருந்தே தந்தையிடம் இசை பயின்ற வெங்கடேஷ், பின்னர் கிட்டார் உள்ளிட்ட பல இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ரவீந்திரன் மற்றும் ஏ.டி. உம்மர் ஆகியோருக்கு உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் அவரது திறமைக்கு அடித்தளமாக அமைந்தது.

    passed away

    1981-இல் 'பிரேம யுத்தம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சுயேச்சையான இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், அவரது புகழ் மலையாள சினிமாவில் தான் உச்சத்தைத் தொட்டது. 1986-இல் தம்பி கண்ணந்தானம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'ராஜாவின்டே மகன்' படத்தின் இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 1985 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் மலையாள சினிமாவின் மிகச் சிறந்த இசைப் படைப்பாளராக விளங்கினார்.

    இதையும் படிங்க: பெரிதாக கவர்ச்சியும் இல்ல.. கிளாமரான லுக்கும் இல்ல..! ஆனாலும் இளசுகளை சிரிப்பால் மயக்குறீங்களே ஷாலினி..!

    'இந்திரஜாலம்', 'துடர்கதா', 'வாத்சல்யம்', 'ஜானி வாக்கர்', 'கிலுக்கம்', 'ஹிட்லர்', 'சோபானம்', 'காபூலிவாலா', 'மின்னாரம்', 'ஸ்படிகம்' போன்ற பல மலையாளத் திரைப்படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. 'அப்பு', 'மகாயானம்', 'தேவாசுரம்' போன்ற படங்களுக்கான பின்னணி இசையும் அவரது தனித்துவமான பாணியை வெளிப்படுத்தியவை.

    மலையாளத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த வெங்கடேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500 பாடல்களை உருவாக்கியுள்ளார். தம்பி கண்ணந்தானம் இயக்கிய படங்களில் அதிகம் பணியாற்றிய அவர், கவிஞர் கிரீஷ் புத்தஞ்சேரி உடன் இணைந்து பல நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கினார். 

    பாடகி கே.எஸ். சித்ரா அவரது பாடல்களை அதிகம் பாடியவர். 'குஞ்சிக்கிளியே கூடவிடே', 'கிலுகில் பம்பரம்', 'மீனவேனலில்', 'ஊட்டிப்பட்டணம்', 'சாந்தமீ ராத்திரியில்', 'முத்துமணித்தூவல் தரான்', 'கனகநிலாவே துயிலுணரூ', 'பாதிராக்கிளி வரூ', 'கறுகவயல் குருவி', 'மாலினியுடே தீரங்கள்', 'நீலாஞ்சன பூவின்', 'அலையும் காட்டின் ஹ்ருதயம்', 'தாமரக்கண்ணனுறங்கேணம்', 'புத்தன்புதுக்காலம் முத்தமிட்ட நேரம்', 'காபூலிவாலா நாடோடி', 'பால்நிலாவினும்', 'நிலாவே மாயுமோ', 'ஒரு வல்லம் பொன்னும் பூவும்', 'ஆற்றிரம்பில் ஆல்மரத்தில்', 'ஏழிமலை பூஞ்சோலை', 'பருமலச்செருவிலே', 'நீயுறங்கியோ நிலாவே' போன்ற எவர்கிரீன் பாடல்கள் அவரது இசைப் பயணத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன.

    passed away

    சென்னையில் காலமான எஸ்.பி. வெங்கடேஷின் இறுதிச் சடங்கு, சென்னையின் ஆலப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

    திரையுலகில் பல தலைமுறைகளை கவர்ந்த அவரது இசை, இனி வரும் காலங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவு தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் இழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.

    இதையும் படிங்க: ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!

    மேலும் படிங்க
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    தமிழ்நாடு
    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    தமிழ்நாடு
    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    தமிழ்நாடு
    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share