ஒவ்வொரு வருடமும் நியூ யார்க்கில் உள்ள மெட்ரோபோலிட்டேன் மியூசியத்தில் 'மெட் காலா' நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இன்றி, பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!
இந்த நிகழ்ச்சி ஃபேஷனை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது.

இதில் பிரபலங்கள் நேர்த்தியான டிசைனர் ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர். 
இதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஐந்தாவது முறையாக கலந்து கொண்டார்.

மிகவும் எளிமையான போல்கா புள்ளிகள் கொண்ட பால்மைன் கவுனை அணிந்திருந்தார்.

இந்த ஆடையில் இவரது தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக இவர் அணிந்திருந்த ஆடையை விட... அவர் அணிந்திருந்த நெக்லெஸ் பற்றி தான் பலர் தற்போது பேசி வருகிறார்கள்.

முழுக்க முழுக்க உயர்தர வைரக்கல்கள் பாதிக்கப்பட்ட இந்த நெக்லஸில், ஒரு பெரிய பார் சைஸ் மரகத கல் இருந்தது.

மேலும் இந்த நெக்லெசின் விலை ரூ.204.5 கோடி என கூறப்படுகிறது. வோக் இந்தியாவின் கூற்றுப்படி, 241.06 காரட் முகம் கொண்டது இந்த மரகதத கல் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரோபோ ஷங்கர் குடும்பம் களைகட்டிய கொண்டாட்டம்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!