தனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். இதை விஷாலும் உறுதி செய்துள்ளார்.
'யோகி டா' பட விழாவில் விஷால் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் உலா வந்தன. இதேபோல இது வதந்தியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகை சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' பட விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமண அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் நடிகை சாய் தன்ஷிகா ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் உடன் எனக்கு திருமணம் என்று பட விழாவில் அறிவித்தார்.

தன்ஷிகாவை தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், "இதற்கு மேல் நான் இதை மூடி மறைக்க முடியாது. நான் தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன். அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 29 தேதி. அன்றைய தினமே என்னுடைய திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கட்டிடப் பணி ஆகஸ்ட் 15ஆம் தேதி முடிந்துவிடும். அதை தொடர்ந்து எங்களுடைய திருமணம் நடைபெறும். தன்ஷிகாவை நான் வாழ்நாள் முழுவதும் இதே சிரித்த முகத்துடன் பார்த்துக்கொள்வேன்" என்று விஷால் தெரிவித்தார்.

2019 மார்ச் 16 ஆம் தேதி விஷாலுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் இடையிலேயே உறவு முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஷாலுக்கு கிடைத்த பெண் தேவதை..! அழகிய நடிகையை கரம்பிடிக்க போகிறார் ஆக்ஷன் ஹீரோ..!
இதையும் படிங்க: இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!