தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது ‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பயணித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது, ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பெருந்திரளாக வரவேற்க கூடியிருந்தனர். இதனால் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

விஜய் விமானத்தில் இருந்து உற்சாகமாக இறங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் திறந்த வேனில் ரசிகர்களை சந்தித்து, கையசைத்து வணக்கம் தெரிவித்து, கொடைக்கானலுக்கு புறப்பட்டார். இந்த நிகழ்வின் போது, ரசிகர்கள் வேனில் ஏற முயன்றதால் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்நிலையில் இன்று கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு வேனில் வந்தார் விஜய். அங்கிருந்து சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்திறங்கினார். அப்போது அவருடன் அவரது உதவியாளர் ஜெகதீஷ், விஜயுடன் ஒரு பெண்ணும் வந்திறங்கினார். அந்தப்பெண் ஜனநாயகன் பத்தில் நடிக்கும் மமிதா பைஜூ. இருவருக்கும் உண்டான காட்சிகளை படமாக்கவே கொடைக்கானலுக்கு சென்று வந்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: கதாநாயகனாக களமிறங்கும் அர்ஜுன் தாஸ்.. நடிகை இந்த காந்த கண்ணழகியா..!
முன்னதாக நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் தனி விமானத்தில் பயணித்ததாக சமூக வலைதளங்களில் பரப்ப்பட்டு இன்று வரை விவாதப்பொருளாக மாறியது. கடந்த டிசம்பர் 2024-ல், விஜய், நடிகை த்ரிஷா ஆகியோர் நான்கு உதவியாளர்களுடன் சென்னையிலிருந்து கோவாவுக்கு தனி விமானத்தில் சென்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த விமானம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டது.

விஜயுடன் மமிதா பைஜு
விஜய் தற்போது தனது அரசியல் பயணத்திலும், "ஜனநாயகன்" படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு, மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்... கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!