தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன்.

சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அவர், தனது நடிப்பு மட்டுமின்றி, தனக்கென ஒரு தனி ஸ்டைல் மற்றும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: இளவரசி தோற்றத்தில் ஜொலித்த ஷபானா..!! ‘செம்பருத்தி’ புகழ் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

சிறிய கதாபாத்திரங்களின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய ரம்யா பாண்டியன், பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

குறிப்பாக, இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது.

‘ஜோக்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரம்யா பாண்டியனுக்கு பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்யாமல், கதையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு திரைப்படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ‘ஆண் தேவதை’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘அருள்வான்’ திரைப்படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

திரைப்படங்களைத் தாண்டி, ரம்யா பாண்டியனின் பிரபலத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது அவரது போட்டோஷூட் புகைப்படங்கள்.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

அந்த போட்டோஷூட்டில் பாரம்பரிய சேலையுடன் கூடிய ஸ்டைலான தோற்றத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இதையும் படிங்க: ரிலீஸ் ஆகியும் தீராத பிரச்சனை..!! மீண்டும் 'ஜனநாயகன்' படத்தின் மீது வழக்கு.. சிக்கலில் சென்சார் போர்டு.. கோர்ட் அதிரடி..!