வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தொலைக்காட்சி

உண்மையை உடைத்த கார்த்திக் – ஷாக் கொடுத்த சாமுண்டேஸ்வரி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் மகேஷ் ராவதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட திட்டமிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து நீ கார்த்திக், பிசினஸ் மேன் தானே என்று விசாரிக்க கார்த்திக் ஆமாம் நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான். 

மேலும் எதுக்காக நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்றேன், அப்போது தான் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் வந்திருக்கேன் என்பது உங்களுக்கு புரியும் என சொல்கிறான். கடைசியில் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் வந்திருக்கான் என்பதை அறியும் ராஜேஸ்வரி நான் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்கிறாள். 

அடுத்ததாக மயில்வாகனம் பாட்டி சொன்ன இலையை பறித்து வந்து கோட்டில் தேய்த்து அதை கொண்டு போய் மகேஷிடம் கொடுத்து சாமுண்டீஸ்வரி போட்டு கொள்ள சொன்னதாக சொல்லி போட வைக்கிறான். 

இதையும் படிங்க: பரமேஸ்வரி பாட்டியின் என்ட்ரி.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

பிறகு ரேவதி மற்றும் மகேஷ் என இருவரும் மேடை ஏறி டான்ஸ் ஆட தொடங்க மகேஷ்க்கு அரிப்பு ஏற்பட்டு நடத்தனத்தில் சுதப்புகிறான். பிறகு ஸ்வாதி டான்ஸ் ஆடுகிறாள். அடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகிணி ஆடுகின்றனர். இதையடுத்து எல்லாரும் சேர்ந்து நடனமாட சாமுண்டீஸ்வரி அங்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். 

யாரும் எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: மகேஷ், மாயாவுக்கு வரும் சந்தேகம்.. சாமுண்டீஸ்வரியின் கணக்கு என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी