வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

நகைப்பிரியர்களுக்கு ஷாக்… இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…! 

கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. 

கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. 

வாரத்தின் கடைசி நாளான கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இன்று நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை நிலவரம் (17/02/2024): 

சென்னையில் கடந்த இறுதி வார வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,890 ரூபாய்க்கும், சவரன் 63,120 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: அடிதூள்… ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு குறைவா?

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 50 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 54 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து 69 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை: 

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. வெள்ளி விலை கிராம் 108 ரூபாய்க்கும், கிலோ  ஒரு லட்சத்து  8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கூட ஓரிரு நாட்களில் விலை குறையும் என காத்திருந்தால் தொடர்ந்து விலையேறி ஷாக் கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: மக்களே கைநழுவிய பொன்னான வாய்ப்பு… தங்கம் விலை மீண்டும் தடாலடி உயர்வு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी