வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி ›

நகை வாங்கணுமா.. உடனே கிளம்புங்க.. தலைகீழாக மாறிய தங்கம் விலை..!

உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று சவரன் ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 8,805 ரூபாய்க்கும், சவரனுக்கு 70,440 ரூபாய்க்கும் விற்பனையானது. 

தங்கம் விலை நிலவரம் (15/05/2025): 

இன்றைய நிலவரப்படி, (வியாழக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 195 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 610  ரூபாய்க்கும், சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம் விலை ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஏறிய வேகத்தில் சரசரவென இறங்கிய தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா? 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 213 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 393 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,704 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 144 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்தது போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்ததாலும், அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாலும் தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.   

இதையும் படிங்க: சரசரவென உயரும் தங்கம் விலை…. இன்று மட்டும் சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी