வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

வரலாற்று உச்சம்!! இனி நகைக்கடை பக்கம் தலைவச்சியும் படுக்க முடியாது… தங்கம் விலை தாறுமாறு உயர்வு..!

வரலாற்று உச்சமாக இன்று தங்கம் விலை சவரனுக்கு 72,000 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருவது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த வார இறுதி வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரன் 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (21/04/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 015 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: உடனே நகைக்கடைக்கு ஓடுங்க… தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி மாற்றம்!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 76  ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 834 ரூபாய்க்கும், சவரனுக்கு 608  ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 672 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

கடந்த 5 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போர் பதற்றம் முதலீட்டாளர்களை தங்கம் மீதான முதலீடுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் மத்திய வங்கி தங்க கொள்முதல் ஆகியவை விலைகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றிலேயே முதல் முறை; 70 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी