சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,130 ரூபாய்க்கும், சவரன் 73,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: ரூ.73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
தங்கம் விலை நிலவரம் (06/06/2025):
இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கும், சவரன் 73 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 9 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், சவரன் 79 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை மாறாத நிலையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 117 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.3,000 அதிகரித்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?