உலகின் படு பயங்கரமான டிராபிக் நெரிசல் நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது பெங்களூரு மாநகரம் அலுவலக நேரம் எனப்படும் உச்ச நேரத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவை கடப்பதற்கு சில நேரங்களில் இரண்டு மணி நேரம் கூட ஆகிறதாம் பெங்களூரு நகரில் அதனால் கடும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர் பெங்களூர் வாசிகள்.
கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் வடமாநிலங்கள் என இந்தியா முழுவதிலும் இருந்து குடியேறுவதற்கு முதன்மை தேர்வாக மக்கள் பெங்களூர் நகரத்தை தேர்வு செய்வதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் ஈடுபட்டாலும் பிரச்சனை கட்டுக்குள் வராமல் உள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தான் டாக்ஸி சூன்யா என்ற பெயரில் எலக்ட்ரிக் ஹெலிகாப்டர் ஒன்றை தனியார் நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்த உள்ளது.
Electric vertical take off and landing (evoTOL) முறையிலான ஏர் கிராஃப்ட் ஒன்று தற்போது பெங்களூர் நகரில் கலக்க உள்ளது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ, புகைப்படங்கள்.... 10க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்...!
இது சாலை போக்குவரத்துக்கு மாற்றான ஒரு புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது கூடிய விரைவில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஏர் டாக்ஸிகள் 6 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம் ஒரு விமானியும் பயணிக்கலாம் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் விமானத்தில் 120 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் இதனுடைய சார்ஜ் செய்யும் நேரம் 30 நிமிட காலம் ஆகும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத நேர விரயத்தை தடுக்கவும் ஒரு மாற்று ஏற்பாடாக இந்த சிறிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த விமான ம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனுடைய விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என இந்த விமானத்தை உற்பத்தி செய்த நிறுவன மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இ ஏர்கிராஃப்ட் வாகனத்தை ஓடுதளம் இன்றி டேக் ஆப் செய்யலாம் இறக்கவும் செய்யலாம் மிகப் பெரிய மொட்டைமாடிகள் அல்லது சிறிய விளையாட்டு மைதானங்கள் அகலமான சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் இந்த விமானத்தை ஏற்றியும் இறக்கவும் செய்து கொள்ளலாம்.

இந்த ஈ ஏர்கிராஃப்ட் முதல் கட்டமாக எலக்ட்ரானிக் சிட்டி யிலிருந்து கெம்பகவுடா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வரை 2028 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் நேர விரையமும் தடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏர் டாக்ஸி ஜப்பான் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதாகவும் இதற்கான தொழிற்சாலை பெங்களூருக்கு அருகிலேயே நிறுவப்படும் என்றும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
இதையும் படிங்க: மணிப்பூரில் புதிய அரசு அமைக்க கட்சிகள் அச்சம்... ஜனாதிபதி ஆட்சி அமல்..?