வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

5000 பேருடன் தவெகவில் இணைவோம்..! அதிமுக நிர்வாகி பகிரங்க அறிவிப்பு..!

5000 பேருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணை இருப்பதாக அதிமுகவை சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிர்ச்சி அலை. அதிமுகவின் முக்கிய நிர்வாகி மற்றும் ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தனது சுமார் 5,000 ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறினார். குறிப்பாக, “தோத்ததுக்கு அப்பறம் கட்சி காரங்க ஃபோன் பண்ணி அழுதாங்க… திடீர்னு தி.மு.கவோட கூட்டணி வைக்குற அளவுக்கு போனத எங்களால ஏத்துக்க முடியல” என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

திமுகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுகள் அல்லது ஆதரவு நிலைப்பாடு தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்ததாகவும் அவர் விளக்கினார். ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகும், கட்சியின் சமீபகால அரசியல் போக்கு தன்னை அதிருப்திப்படுத்தியதாகக் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!

தனது ஆதரவாளர்களுடன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.கவை தேர்வு செய்ததாகவும் அவர் சொன்னார். விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது குழுவினருடன் த.வெ.கவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு… சட்டசபையில் சலசலப்பு..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी