வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீட்டெடுக்கும் வகையில், 2026 ஜனவரி 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, ஓய்வூதியம் கடைசி ஊதியத்தின் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் வகையில் உள்ளது. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்தது. அரசு இந்த திட்டத்திற்காக ஒரே நேரத்தில் 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததுடன், ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அறிவிக்க வலியுறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற விதிகளை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல் தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी