வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து… தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட காங்கிரஸ்…!

தவெகவிற்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டதால் கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.

48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  திமுக உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி.கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரஸ் ராஜினாமா செய்யுமா.?
 அல்லது மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?  என்பது தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது .

 கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  திமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக உள்ளது.  இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது .

 48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக விற்கு 39 உறுப்பினர்கள் உள்ளனர் .

 அதிமுக – 3
இயூமுலீ   -1
மதிமுக  –    1
காங்கிரஸ் –  2
சிபிஎம்     –  1

இந்நிலையில் திமுக உறவை காங்கிரஸ் கட்சி இன்று முறித்துக் கொண்டது. இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவி வழங்கப்பட்டது.
 மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் உள்ளார் .

இதையும் படிங்க: காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

 திமுகவின் உறவை காங்கிரஸ் கட்சி முறித்துக் கொண்ட நிலையில் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது .

 மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான். காங்கிரஸ் கட்சியைச் சேந்த இருவர்தான் கவுன்சிலர்களாக வெற்றிபெற்றனர். ஆனால், மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்க, திமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. அது இன்று வரை நீடித்தும் வருகிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்தே திமுக கவுன்சிலர்களுடன் மேயர் சரவணனுக்கு மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: “ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெறும்”..! விஜயுடன் “கை” கோர்த்தது ஏன்.? கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी