நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. காமவெறி பிடித்த சிலர் அப்பாவி குழந்தைகளைக் கூட தனியாக விடுவதில்லை. பாலியல் வன்கொடுமை, தடுத்து நிறுத்த முயன்றாலோ, தப்பிக்க நினைத்தாலோ கொலை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குஜராத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றவாளி, அது தோல்வியில் முடிந்ததால், அவளது அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை செலுத்தி மிக கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தை நினைவூட்டியுள்ளது.
ராஜ்கோட் அருகே உள்ள ஜஸ்தான் பகுதியில் உள்ள அட்கோட் பகுதியில் டிசம்பர் 4 ஆம் தேதி காலை இந்தக் கொடுமை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்சிங் தேஜ்சிங் என்ற நபர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல் கண்காணிப்பாளர் விஜய் சிங் குர்ஜார் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் அவளது அந்தரங்க பாகத்தை இரும்பு கம்பியால் தாக்கியதோடு, அதனை உட்செலுத்தவும் முயன்றுள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கபட்ட சிறுமி தற்போது ராஜ்கோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தாஹோத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ராஜ்கோட்டில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருவதாக அறியப்படுகிறது. தற்போது ராஜ்கோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்க போலீசார் உடனடியாக 10 குழுக்களாக களத்தில் இறங்கினர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சந்தேக நபர்களின் புகைப்படங்களை சிறுமியிடம் காட்டியபோது, அவற்றில் குற்றம் சாட்டப்பட்ட ராம்சிங் தேஜ்சிங்கை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அடுத்த வயலில் அவர் வேலை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆபாச படம் காண்பித்து ஓரினச்சேர்க்கை... 5 சிறுவர்களை சீரழித்த விடுதி போலி வார்டன் போக்சோவில் கைது...!