பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. தொழிலதிபர். பீகார் மாநிலத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற Magadh மருத்துவமனையின் தலைவர் ஆவார். இதுதவிர, இன்னும் சில தொழில்களையும் கோபால் கெம்கா செய்து வந்தார். பாட்னா கெம்கா என அழைக்கப்பட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியிலும் பொறுப்பு வகித்தார். காந்தி மைதானம் ஏரியாவில் உள்ள வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில்காரில் திரும்பினார். மெயின்கேட் முன் கார் நின்றதும், காரை விட்டு இறங்க டோரை ஒபன் செய்தார்.
அங்கே தயாராக நின்றிருந்த லைட் புளூ கலர் சட்டை அணிந்த ஆசாமி, காரை நெருங்கி வந்து கெம்காவை துப்பாக்கியால் சரமாரி சுட்டான். இதில், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார், கோபால் கெம்கா. செக்யூரிட்டி அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார். அதற்குள் கொலையாளி பைக்கில் தப்பி ஓடி விட்டான். கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்படும் சிசிடிவி வீடியோ பீகாரில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீசார் வந்து கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாட்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப் பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தொழில் விரோதமா? அல்லது அரசியல் பிரச்னையா? அல்லது வேறு காரணமா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகி்னறனர்.
இதையும் படிங்க: ரூ.2,000 கோடி சொத்துகளை கைப்பற்ற நடந்த சதி!! நேஷனல் ஹெரால்டு வழக்கை புட்டுபுட்டு வைத்த ED!
தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. பாஜ, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. பாரதிய ஜனதாவில் அங்கம் வகித்த ஒரு தொழிலதிபருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, பீகாரில் சாதாரண மக்களுக்கு எங்கே பாதுகாப்பு கிடைக்கப் போகிறது? முதல்வர் நிதிஷ்குமார் தோற்று விட்டார் அவருக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான அடி கொடுப்பார்கள் என எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் சாடினார்.

இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோபால் கெம்கா கொலை நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கோபால் கெம்காவின் மகன் குஞ்சன் Gunjan 2018-ம் ஆண்டு இதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாட்னா அருகே உள்ள Vaishali பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் காரை விட்டு இறங்கியபோது அவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர். அவர் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டார்.ஆறரை ஆண்டுகள் கழித்து அப்பா கோபாலும் அதே பாணியில் கொல்லப்பட்டது பீகார் தொழில் துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற சம்பவம், பாஜகவும் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாகிவிட்டது. அரசாங்கம் அங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
பீகாரின் சகோதர சகோதரிகளே, இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள கூடாது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது. ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும் - மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீகாருக்கான நேரம் - அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை நீங்கள் செலுத்தும் வாக்கு.. அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீகாரை காப்பாற்றுவதற்கும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!