வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

வெள்ளாற்றில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்த சோகம்..! கதறி துடித்த பெற்றோர்..!

கடலூரில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில்  உள்ள வெள்ளாாற்றில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் உபயதுல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து விறு விறுவென உயர்ந்ததாக தெரிகிறது. அதனை சமாளிக்க முடியாமல் மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. படுகாயம் அடைந்த 18 பேர் கதி?

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளிங்கால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வெள்ளாற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன.

ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளநோட்டு அச்சடிப்பு விவகாரம்.. போலீசை கண்டதும் தப்பி ஓடிய விசிக நிர்வாகி… போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी