வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

துப்பாக்கி ஏந்திய போலீசுடன் எஸ்டிபிஐ நிர்வாகியின் கடைக்குள் புகுந்த ED… 1 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை…! 

மேட்டுப்பாளையத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்பவரின் வீடு மற்றும் பழக்கடையில் மத்திய அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்பவரின் வீடு மற்றும் பழக்கடையில் மத்திய அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் எக்ஸ்டென்ஷன் நெருவைச் சேர்ந்தவர் ராஜிக்(35). இவர் கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.மேலும்,சிறுமுகை சாலையில் பழைய இரும்புக்கடை வைத்து கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்கிறார்.

இந்நிலையில் இவரது வீடு உள்ள எக்ஸ்டென்ஷன் வீதி மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் இன்று காலை 10 மணி முதல் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,துப்பாக்கி ஏந்திய 6 மத்திய ரிசர்வ் போலீஸ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: எஸ்டிபிஐ கட்சி தலைவர் கைது எதிரொலி.. 10 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு திடீர் சோதனை..!

அமலாக்கத்துறை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குழுமி கோஷமிட முயன்றனர். அவர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும்,தற்போது அங்கு எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு.. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी