மருத்துவர்கள் என்பவர்கள் மக்களின் உயிரை காப்பாற்றும் உன்னதமான சேவையை செய்பவர்கள். தன்னலம் கருதாது மருத்துவ சேவைகளை வழங்கும் இவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில போலி மருத்துவர்கள் உருவாகி மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் ஏமாற்று வேலை செய்கின்றனர். அப்படி போலி மருத்துவம் பார்த்து இதய அறுவை சிகிச்சை செய்ததில் ஒரே மாதத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரபல மருத்துவர் என் ஜான் கெம். இவரது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, நரேந்திர விக்ரமாதித்திய யாதவ் என்பவர் டாமோ நகரில் உள்ள கிறிஸ்டியன் மிஷனரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இதய நோயாளிகள் பலருக்கு இவர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். இவரின் அறுவை சிகிச்சையால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக தீபக் திவாரி என்ற வழக்கறிஞர் டாமோ மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த ஹோலி! பாட்டு சத்தம் குறைக்க சொன்னதால் மோதல்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜான் கெம் என்பவர் இங்கிலாந்தில் பணியாற்றி வரும் உண்மையான இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெயரில் போலியாவணங்களை தயாரித்து நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பவர் போலி மருத்துவராக பணியாற்றி வந்ததும் அம்பலமானது. இவர் மும்பையில் பதிவு செய்யப்பட்ட பிஎச்டி பட்டம் பெற்ற போலி மருத்துவர் என கூறப்பட்டுள்ளது.

அவரது ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட விசாரணைக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். ஹைதராபாத்தில் விக்ரமாதித்யா யாதவ் மீது மோசடி வழக்குகள் உள்ளதாகவும் இந்த கோழி மருத்துவரின் சிகிச்சையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வழக்கறிஞர் தீபக் திவாரி கூறியுள்ளார். இந்த போலி மருத்துவர் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருவதால் பொது நிதியை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: தீயின் முன் தலைக்கீழாக தொங்கவிடப்பட்ட பச்சிளங்குழந்தை.. மூடநம்பிக்கையால் பறிபோன கண் பார்வை..!