விருதுநகர் மாவட்டம் வத்ராப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மகன் பாண்டி செல்வம் 25 இவரது மனைவி வனிதா 24,இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
மேலும் கடந்த ஆறு மாத காலமாக பாண்டி செல்வம் கப்பலூர் சிட்கோவில் உள்ள பிளாஸ்டர்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா பட்டாசு கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக வனிதா கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் குழந்தை பார்கவி இரவில் தாய் வனிதா உடனும் காலையிலிருந்து மாலை வரை தந்தை பாண்டி செல்வம் உடனும் இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: “விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...!
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி வழக்கம்போல கம்பெனிக்கு வேலைக்கு வந்துள்ளார். 11 மணி அளவில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது அழுதுள்ளது. அழுத குழந்தை பார்கவியை ஆத்திரத்தில் இருந்த தந்தை பாண்டி செல்வம் அடித்து அருகே இருந்த தண்ணி தொட்டிக்குள் தள்ளிவிட்டு உள்ளார் .சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்தபோது உயிரிழந்தது தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த பாண்டி செல்வம் குழந்தையை பிளாஸ்டர் தயாரிக்கும் இயந்திரத்திற்கு அடியில் இருந்த பிளாஸ்டர் மூட்டைக்குள் மறைத்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாண்டிச்செல்வம் திருமங்கலம் காவல் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று அதே கம்பெனியில் பணியாற்றி வரும் முத்துக்குமார் என்ற தொழிலாளி இயந்திரத்தை இயக்க முற்படும்போது, துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, பிளாஸ்டர் மூடைக்குள் மறைத்து வைத்திருந்த குழந்தையை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தந்தை பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கணவன் மனைவி தகராறில் குழந்தையை அடித்தே கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பீகார் போன முதல்வர் ஸ்டாலின்.. கனிமொழி எம்.பி போட்ட பதிவு.. சூடுபிடிக்கும் அரசியல்..!!