வேலியே பயிரை மேய்ந்தது போல் குடிபோதையில் காவலர் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் நின்றுகொண்டு பெண்களைப் பார்த்து சைகை காட்டி அருவருக்கத்தக்க முறையில் பேசிய காவலர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் யுவராஜ் குறித்த அரை நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கரியாலூரில் உள்ள காவலர் குடியிருப்பில், பள்ளி மாணவர்கள் செல்லும் பொதுப்பாதையில் பட்டப்பகலில் அரை நிர்வாண கோலத்தில் நின்றுகொண்டு, திருமணமான அல்லது திருமணமாகாத ஒரு ஆண், திருமணமான ஒரு பெண் சம்மதித்தால் உறவு கொள்ளலாம் என்றெல்லாம் அருவருக்கத்தக்க முறையில் பேசியிருக்கிறார். அரை நிர்வாண கோலத்தில் நின்றுகொண்டு, அவ்வழியாக சென்ற பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை பார்த்து சைகை காட்டி, காவலர் யுவராஜ் இப்படி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING பயணிகளின் அவசர கவனத்திற்கு... சென்னையில் திடீரென முடங்கியது விமான சேவை...!
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது. குறிப்பாக, குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் காவலர் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் திருமணமான ஆண் மற்றும் பெண் ஒருவர் சம்மதித்தால் தவறான உறவில் ஈடுபடலாம் என்ற வகையில் பெண்களை அவமதிக்கும் கூற்றுக்களை பேசியிருப்பதும் வீடியோவில் வெளிப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை முதன்மை என்பதையும், அதனை மீறிய காவலரை உடனடியாக இடைநீக்கம் செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை காக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகும் இவ்வீடியோ, காவல்துறையின் மரியாதைக்கு சவாலாக மாறி, பரவலான விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: காலக்கெடு நீட்டிப்பு... வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வெளியானது குட்நியூஸ்...!