தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. நாளை முதல் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.
இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டமானது தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க மீண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால் உச்சநீதிமன்றத்தை நாட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின் படி திமுக சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இறந்தவர்களுக்கு வாக்கு இருக்கிறது என்றும் உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை எனவும் தெரிவித்தார். கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டம் என்று கூறுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: கிள்ளி குடுக்க உங்க அப்பா வீட்டு பணமா ஸ்டாலின்? ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயக்குமார் வலியுறுத்தல்...!
எஸ்.ஐ.ஆர்- ஐ கண்டு இஞ்சி தின்ற குரங்கு போல திமுக முழித்துக் கொண்டிருக்கிறது எனவும் சாடினார். கள்ள ஓட்டு போடுவதை தான் திமுக வேலையாக கொண்டிருக்கிறது என்றும் 234 தொகுதிகளுக்கும் நாங்கள் கண்டறிந்து புகார் கொடுத்து கொண்டு இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், நாங்கள் புகார் கொடுத்த பிறகு ஆர் கே நகர் தொகுதியில் 31,000 வாக்குகள் நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடியை நோக்கி ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’... குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த மாஜி அமைச்சர்கள்...!