கர்நாடக மாநிலம், மதுகிரி போலீஸ் டி.எஸ்.பி ராமச்சந்திரப்பா, புகார் தெரிவிக்க காவல் நிலையம் வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க பாவகடாவில் உள்ள டி.எஸ்.பி அலுவலகத்தை அந்தப் பெண் அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண்ணின் குறையை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, போலீஸ் அதிகாரி அந்தப் பெண்ணை அலுவலகத்தில் உள்ள ஒரு தனி அறைக்கு அதாவது கழிப்பறைக்கு அழைத்துச் சென்று ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை ஜன்னல் வழியாக ஒருவர் பதிவு செய்த, வீடியோ தற்போது பகிரங்கமாகியுள்ளது. மாநில உள்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலும், கூட்டுறவு அமைச்சரின் தொகுதியிலும் நடந்த சம்பவம், அமைச்சர்கள் இருவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!
இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, மாவட்ட காவல் துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். 35 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஜன்னலில் இருந்து ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வீடியோவில் உள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் குறைவு...’ துரை வைகோவின் சல்சாப்பு... ஆதாரங்களை காட்டி செம ஆப்பு..!