மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பார்கி அணையில் ஏற்பட்ட பரிதாபமான படகு விபத்தில் 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் நீர்ப்பரப்பில், மாநில சுற்றுலாத் துறை இயக்கும் சுற்றுலா படகு ஒன்று திடீர் புயல் காற்று காரணமாக சமநிலை இழந்து கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பார்கி அணை, நர்மதா நதியின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு படகுச் சவாரி வசதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், திடீர் வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் அமைப்புகளில் குறைபாடு இருந்ததா என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன.

SDRF. உள்ளூர் போலீஸ், மீன்வளத் துறை மற்றும் நன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மீட்புப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் உயிர் தப்பிய சிலர், படகில் உயிர்காக்கும் சாதனங்கள் (லைஃப் ஜாக்கெட்கள்) போதுமான அளவு இல்லை என்றும், படகு அதிக அளவு நிரம்பியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரு தாயும் அவரது 4 வயது குழந்தையும் இறுகக் கட்டிப்பிடித்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மேலும் மனதை உலுக்கியுள்ளது.
இதையும் படிங்க: தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!
பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படகில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு உடையை அவசர அவசரமாக வழங்கிய காட்சிகள் அதில் இடம்பெற்ற உள்ளன. படகுக்குள் தண்ணீர் புகுந்த பிறகு படையில் இருந்த ஊழியர்கள் கட்டி வைத்திருந்த பாதுகாப்பு உடைகளை பயணிகளுக்கு விநியோகித்து இருக்கின்றனர். படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் பாதுகாப்பு உடைகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. படகில் ஏறும்போதே பாதுகாப்பு உடை கொடுத்திருக்க வேண்டும் என்றும் இதுபோல அலட்சியமாக செயல்பட்டது தான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம்: படகு கவிழ்ந்து விபத்து.. 9 பேர் பரிதாப பலி..!!