உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பழமுதிர்ச்சோலை திருவருள் முருக பக்தர்கள் சபை சார்பில் 25ஆம் ஆண்டு திருக்கல்யாண விருந்து மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற்றது. திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சிக்காக 8 டன் காய்கறிகள் 30 டன் அளவில் அரிசி பருப்பு பலசரக்கு எண்ணெய் நெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மற்றும் திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி நடைபெறும். திருக்கல்யாண விருந்து வைபவ நிகழ்ச்சிக்கு பறவை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் சுமார் எட்டு டன் அளவில் கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு தக்காளி, வெங்காயம் , காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வழங்கினர். அரிசி 10டன், பருப்பு 3 டன், சமையல் எண்ணெய் 4 டன், பலசரக்கு 4 டன், வெல்லம் 2 டன் என மலை போல் குவிந்த பொருட்களை 1 ஆயிரத்து 500 தன்னார்வலர்கள் ,3000 பெண்கள் கலந்து ந்து கொண்டு காய்கறிகளை நேற்று பகலில் இருந்து இன்று காலை வரை வெட்டி சமையலுக்கு ஏற்பாடு செய்தனர்.

இரவு மாப்பிள்ளை விருந்தில் கேசரி, வெண் பொங்கல், சாம்பார், வடை என 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் திருக்கல்யாணம் நாளான இன்று காலை 6 மணி முதல் இட்லி, உப்புமா, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், வடை ஆகியவை தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!
இந்த நிகழ்வு மாலை 6 மணி வரை நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சியில் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடையாளர்கள் நிதி உதவி அளித்தனர்.
இதையும் படிங்க: கள்ளழகரை குளிர்விக்கும் தோல் பை... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... யாருமே அறியாத பின்னணி...!