வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மாணவர்களுக்கு மனவள பயிற்சி.. நல்லுறவு மேம்படும்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.!

சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் பள்ளிகளில் நிலவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையிலான உறவு குறித்து முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, முன்பு பள்ளிகளுக்குச் சென்று பேசும்போது ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போதைய சூழலில் அதே அறிவுரையை மாணவர்களிடமே சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் மனப்பான்மை குறைந்து வருவதை உணர்ந்த அமைச்சர், இதை சரிசெய்யும் வகையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தார்.

மாணவர்களுக்கு பெரியவர்களுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பதை மனவள பயிற்சி மூலம் கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த பாடத்திட்டம் மாணவர்களின் நடத்தையை மேம்படுத்தவும், சமூகத்தில் மரியாதைக்குரிய மனநிலையை வளர்க்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக பாடத்திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மக்கள் நலன்… துல்லியமான தகவல்"..! EXCELLENT…!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், மாணவர்களிடையே ஒழுக்கமும் மரியாதையும் வளர இது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முயற்சிகள் மூலம் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்லுறவு மேம்படும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது.

இதையும் படிங்க: அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी