• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாதி நாள் எரிந்த ரயில் பெட்டிகள்.. ”இப்படியே போனா அவ்வளவு தான்” - பகீர் கிளப்பும் ராமதாஸ் !

    தனி பட்ஜெட்டில் இயங்கிய ரெயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு, பாதிநாள் எரிந்த ரெயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொதுசுகாதாரம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 14 Jul 2025 16:20:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss Condemnation to railway deaprtment

    திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகேயுள்ள இருளர் காலனி மற்றும் வரதராஜபுரம் ஆகிய இரண்டு கிராமமக்கள் ஊரையே காலிசெய்கிற அளவு ரெயில் விபத்தால் உண்டான தீயும் புகைமூட்டமும் இருந்துள்ளது. 

    சென்னை மணலியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து  பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னக சரக்குரெயில் ஜோலார்பேட்டை நோக்கி (13.07.2025) ஞாயிற்றுக்கிழமை சென்றபோதுதான் விபத்து நடந்திருக்கிறது.

    அதிகாலை வேளையில், திருவள்ளூர் மாவட்ட இருளர் காலனி அருகே ரெயில் சென்ற போதுதான், இருப்புப் பாதையை விட்டு விலகி தடம் புரண்டதாக தெரிகிறது. இந்த திடீர் 'தடம்' புரளலால் டீசலை நிரப்பியிருந்த ரெயில் பெட்டிகளில் தீப்பிடித்து அது பத்துமணி நேரத்துக்கு மேலாக மிக அடர்த்தியாகவே எரிந்துள்ளது. புகை மூட்டம், இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு காற்றில் விஷமாக கலந்து விட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: எங்களுக்கு என்ன பயம்? ஒட்டுக் கேட்பு கருவி உண்மைனா வெச்சது யாருன்னு கண்டுபிடிங்க... அன்புமணி தரப்பு வலியுறுத்தல்!

    இன்னொரு பக்கம் திருவள்ளூர், அரக்கோணம், பொன்னேரி, காஞ்சிபுரம், வேலூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல முக்கிய ரெயில் பாதைவழி சேவையானது, பெரும் பின்னடைவை  சந்தித்திருக்கிறது. இந்த தீ விபத்தால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மின்கம்பங்கள் பழுதாகி, அது இன்னொரு தனி பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறது. 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எடையுள்ள டீசல் எரிபொருள் மொத்தமாக 10 மணி நேரத்துக்கு எரிந்து முடிந்திருக்கிறது.

    தீ அவிப்பில் எத்தனையோ புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்திருந்த போதிலும், 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர்  டீசல் மொத்தமாய் எரிந்து முடிந்த பிறகுதான் தீயின் பக்கத்தில் தீயணைப்பு வீரர்களே  நான்கு இருப்புப்பாதை (டிராக்) யில் மூன்று சேதம் என்று சொல்கிறார்கள்.

    பொதுப்போக்குவரத்து கேள்விக்குறியாகி விட்ட நிலையில், பொதுமக்கள் தவித்துப் போயிருக்கிறார்கள்.  நேர்முகத்தேர்வு, மருத்துவம், திருமணம், தனி நபர்/ அரசு ஊழியர் அலுவல் பயணம் என எத்தனையோ மக்கள் பிரச்சினைகள்- அத்தனையும் சிதறிப் போயிருக்கிறது.

    "விபத்துக்கான காரணம் தெரியவில்லை, விசாரணைக்குழு அமைக்கப் பட்டுள்ளது" என்று தென்னக ரெயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருக்கிறார். தமிழக அமைச்சர் சா.மு.நாசர், சம்பவ இடத்துக்குப்போய் ஆய்வு நடத்திவிட்டு பாதிக்கப் பட்டவர்களை வேறிடத்தில் தங்க வைத்திருக்கிறார், உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். ரெயில்பயணம் பாதிக்கப்பட்டு நின்றவர்களுக்கு பயணத்துக்கான மாற்று ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற தகவல்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    "இதுபோன்று  ரெயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம், இருப்பு பாதைகள் (ட்ராக்) சரியான சீரமைப்பில் இல்லாததும், உயர் அழுத்த மின்கம்பி பராமரிப்பு பணிகளை முறைப்படுத்தாமல் இருப்பதும்தான். ரெயில்வே துறையின் உயரதிகாரிகள் காட்டி வரும் அலட்சியமும் இதுபோன்ற தொடர் விபத்துகளின் பின்னணியில் இருக்கிறது.

    ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடாமல், அதை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டுப் போனது. பொது பட்ஜெட்டில் ரெயில்வே இருக்கும் காரணத்தால் போதிய நிதியுதவி கிடைக்க வழியின்றி, ரெயில்வேயின் முக்கிய பராமரிப்பு பணிகள் முடங்கிப்போய்க் கிடக்கிறது. எந்த வேலைக்கும் தகுதிவாய்ந்த ஆள்கள் இல்லை.

    பல ஆண்டுகளாகவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே, பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு வருவதும் நடக்கிறது. குறைந்த அளவிலான ஆட்களை வைத்துக் கொண்டு,  முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை, ரெயில்வேயில் உருவாகி உள்ளது. 

    இன்னொரு பக்கம் ஆளில்லா ரெயில்வே 'கேட்' களுக்கான 'கேட் -கீப்பர்' பணியிடங்கள் நிரப்பாமலே கிடக்கிறது. அப்படி நிரப்பப்பட்ட பணியிடங்களிலும் மாநில மொழி தெரியாத ஆட்களை ' கேட் - கீப்பர்' வேலையில் அமர்ததி வைத்துள்ளனர்.

    எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்களை சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லும் போது. எரி பொருட்களுடன் கூடுதல் (நீர்க் கலன்கள்)  கலன்களை அவற்றோடு இணைத்து அதில் தண்ணீர் உள்ளிட்ட தீயணைப்பு கருவிகளையும், நன்கு திறமையான ஆள்களையும் உடன் கொண்டு போனால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்க முடியும்- ஆனால் அப்படி செய்யவில்லை. தீ அவிப்பு பணிக்கே ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பாதுகாப்பு தீ அவிப்பு வீரர்களின் கூடுதல் உதவி தேவைப் பட்டிருக்கிறது.

    திருவள்ளூரோடு ஒட்டியுள்ள இருளர்காலனி, வரதராஜபுரம் பகுதியில் வண்டி குடைசாய்வது போல ரெயில்பெட்டிகள் ஊருக்குள் சாய்ந்து விழுந்துள்ளது. இருப்புப்பாதை சரி இல்லையா?அல்லது விபத்துக்கு காரணம் நாச வேலையாஎன்ற கேள்வி எழுகிறது!

    900 டன் எடை கச்சா எண்ணெய்யுடன் 18 எரிபொருள் டேங்கர்கள் ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது, அதில் சில டேங்கர்கள் உருண்டு விழுந்து பிடித்த தீயே இவ்வளவு பாதிப்பு என்கிறபோது மொத்தமும் விபத்தில் சிக்கியிருந்தால் என்ன நிலைமை ?

    சரக்கு ரெயிலில் எரிபொருள் ஆயிலை நிரப்பி அனுப்பி வைத்த இடத்திலேயே தொடங்கியதா குறைபாடு ? அல்லது பயணத்தின் போது ஏற்பட்டதா பாதுகாப்பு குறைபாடு? விபத்தாக மட்டும் இது முடிந்து போய்விட வில்லை. காற்றின் தன்மை மாறுபட்டு நச்சு அதிகமாய் காற்றில் கலந்துள்ளதை மாசு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு வியாதிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வோர், நோய் வாய்ப்பட்டோர், முதியவர்கள், குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள் என ஒரு மிகப்பெரும் மனித சமுதாயமே இதில் பாதிக்கப் பட்டிருக்கிறது. இந்த விபத்தின் மூலம் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகளும், அரசாங்கமும் தெரிவித்தாலும் இந்த விபத்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது.

    பொதுபட்ஜெட்டில் உள்ள ரெயில்வே தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்கவேண்டும். எரிபொருள்களை கொண்டுபோகும் சரக்கு ரெயில்களில் எந்தமாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயிலை இயக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் இருப்புப்பாதை களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: #BREAKING “எல்லாத்தையும் கைப்பற்றிட்டாங்க...” - காலையிலேயே பகீர் கிளப்பிய ராமதாஸ் - டிஜிபியிடம் புகார்...!

    மேலும் படிங்க
    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    தமிழ் சினிமாவை அதிரவைக்கப் போகும் ‘வடசென்னை 2’ அப்டேட்..!! தனுஷ் – சிம்பு மோதலா? வெற்றிமாறன் மாஸ்டர் பிளான்..!

    தமிழ் சினிமாவை அதிரவைக்கப் போகும் ‘வடசென்னை 2’ அப்டேட்..!! தனுஷ் – சிம்பு மோதலா? வெற்றிமாறன் மாஸ்டர் பிளான்..!

    சினிமா
    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    Dance-ல மட்டுமில்ல Fight-லயும் புலி தான்..!! இதுமாதிரியான படம் தான் இனி எங்களுக்கு வேணும் - சமந்தாவை பாராட்டிய சிரஞ்சீவி..!

    Dance-ல மட்டுமில்ல Fight-லயும் புலி தான்..!! இதுமாதிரியான படம் தான் இனி எங்களுக்கு வேணும் - சமந்தாவை பாராட்டிய சிரஞ்சீவி..!

    சினிமா
    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    உலகம்

    செய்திகள்

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

    உலகம்
    குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share