வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே அரசு பணிகளில் முன்னுரிமை..! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு..!

தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே இவ்வுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மொழிகளில் கல்வி பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் அல்லது பள்ளிக்குச் செல்லாமல் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்கள், முன்னுரிமைக்கு தகுதியில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றவர்கள் மட்டுமே உரிய சான்றிதழ்கள் அடிப்படையில் இந்த சலுகைக்குத் தகுதியுள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கல்வி நிறுவனம் மூடப்பட்டிருந்தால் மாவட்ட கல்வி அலுவலர்கள் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற புதிய விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் கல்வி தமிழில் இல்லை..! அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மா.சு. பதிலடி..!

இதையும் படிங்க: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी